மயிலம் பொம்மபுர ஆதீன வெளியீடுகள்

மயிலம் பொம்மபுர ஆதீன வெளியீடுகள் என்பது மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் முயற்சியால் நூலாக வெளியிடப்படும் பழங்கால ஓலைச் சுவடியில் இருந்த அரிய சைவ இலக்கியங்களைக் குறிக்கும்.

மயிலம் பொம்மபுர ஆதீன வெளியீடுகள்

தொகு

தமிழகத்திலுள்ள தொன்மையான ஆதீனங்களுள் குறிப்பிடத்தக்கதாய் விளங்குவது மயிலம் பொம்மபுர ஆதீனம் ஆகும். இம்மடம் வீரசைவத்தை முதலாவதாகப் பின்பற்றுகிறது. சைவமும் தமிழும் தழைத்தினிது வளர வேண்டும் என்னும் அருள்நோக்குடன் சமயப் பணிகளையும் சமுதாயப் பணிகளையும் ஆற்றி வருகிறது இத்திருமடம். இத்திருமடத்தின் 18ஆம் பட்ட சுவாமிகள் அவர்கள் காலத்தில் புலவர் பெருமக்களைக் கொண்டும், தானும் ஒரு புலவராக விளங்கியும் சொற்பொழிவுகள் ஆற்றி வந்தார். தமிழின்மீது கொண்ட அளப்பறிய பற்றினால் கி.பி. 1937ஆம் ஆண்டில் முருகன் செந்தமிழ்க் கழகம் என்னும் அமைப்பை ஏற்படுத்தி வைத்ததோடு 1938 இல் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரி என்னும் பெயரில் தமிழ் வளர்க்கவும் கல்லூரி ஒன்றைத் தொடங்கி அருளினார்.

வெளியீடுகள்

தொகு

பழங்கால சைவ இலக்கியங்களை ஓலைச்சுவடிகளிலிருந்து அச்சுக்குக் கொண்டு வரும் திருப்பணியைத் தொடங்கி வைத்தது மயிலம் பொம்மபுர ஆதீனம் எனலாம். நல்லாற்றூர் சிவப்பிரகாச சுவாமிகளின் நூல்கள் பலவும் மயிலம் பொம்மபுர ஆதீன வெளியீடாகவே பதிப்பிக்கப் பெற்றுள்ளன.

வெளியீட்டு வரிசை

தொகு

நூல் வரிசை/நூற்பெயர்/ஆசிரியர்/ஆண்டு

தொகு
  • 20 இலிங்க அபிடேக மாலை (மூலமும் - பழைய உரையும்) 1965
  • 21 காசி வழித்துணை விளக்கம் 1965
  • 22 ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் நெஞ்சுவிடு தூது (மூலமும் - குறிப்புரையும்) 1966
  • 23 நெடுங்குழி நெடில் குறுங்கடிநெடில் (மூலமும் - உரையும்) வீ.குமாரசாமி 1967
  • 24 ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் பிள்ளைத்தமிழ் (மூலமும் - குறிப்புரையும்) வி.குமாரசாமி 1968
  • 25 கைத்தல மாலை சிவநாம மகிமை (மூலமும் - உரையும்) வீ.குமாரசாமி 1969
  • 26 ஸ்ரீ பசவேசர் பொன்மொழிகள் 1-ஆம் தொகுதி 1987
  • 27 ஸ்ரீ பசவேசர் பொன்மொழிகள் 2-ஆம் தொகுதி 1988
  • 28 ஸ்ரீ பசவேசர் பொன்மொழிகள் 3-ஆம் தொகுதி 1989
  • 29 நிரஞ்சன் மாலை (மூலமும் - உரையும்) வி.குமாரசாமி 1990
  • 30 ஸ்ரீ பசவேசர் பொன்மொழிகள் 4-ஆம் தொகுதி 1990
  • 31 ஸ்ரீ பசவேசர் பொன்மொழிகள் 5-ஆம் தொகுதி 1991
  • 32 ஸ்ரீ பசவேசர் பொன்மொழிகள் 6-ஆம் தொகுதி 1992
  • 33 ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் தாலாட்டு (மூலமும் - உரையும்) வீ.குமாரசாமி 1992
  • 34 ஸ்ரீ பசவேசர் பொன்மொழிகள் 7-ஆம் தொகுதி 1993
  • 35 அல்லமபிரபு தேவர் சடுத்தலம் வி.குமாரசாமி 1993
  • 36 ஸ்ரீ சிவஞான பாலய தேசிகர் திருப்பள்ளி எழுச்சி மூலமும் உரையும் அடிகளாசிரியர் 1993
  • 37 சோணசைலமாலை நால்வர் நான்மணிமாலை நன்னெறி மூலம் மட்டும் 1993
  • 38 இட்டலிங்கப் பெருமான்தோத்திரத் திரட்டு - மூலம் மட்டும் 1993
  • 39 ஸ்ரீ பசவேசர் பொன்மொழிகள் 8-ஆம் தொகுதி
  • 40 மிசிர சடுத்தலம் (குறிப்புரை)
  • 41 சோணசைலமாலை (நூலாய்வு) க.விநாயகம், மா.சற்குணம் 1994
  • 42 நால்வர் நான்மணிமாலை ஓர் ஆய்வு சு.திருநாவுக்கரசு, இரா.இலட்சாராமன் 1994
  • 43 திருச்செந்தில் நிரோட்டகயமாக அந்தாதி பழமலை அந்தாதி (மூலமும் உரையும்) பழைய உரை 1994
  • 44 ஸ்ரீ பசவேசர் பொன்மொழிகள் 9-ஆம் தொகுதி 1995
  • 45 ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள்நெஞ்சுவிடுதூது 2ஆம் பதிப்பு ஆ.சிவலிங்கனார் 1995
  • 46 பெரியநாயகிம்மை கலித்துறை (மூலமும் உரையும்) ஆ.சிவலிங்கனார் 1995
  • 47 ஸ்ரீ பசவேசர் பொன்மொழிகள் 10-ஆம் தொகுதி 1996
  • 48 பரம ரகசிய சடுத்தலம் (மூலமும் பழைய உரையும்) வீ.குமாரசாமி 1996
  • 49 ஸ்ரீ பிட்சாடன நவமணிமாலை (மூலமும் உரையும்) 1996
  • 50 ஸ்ரீ பசவேசர் பொன்மொழிகள் 11-ஆம் தொகுதி 1997
  • 51 சிவ சடுத்தல சாரம் சிவயோக இலக்கணம் அக்கமாதேவி சிருட்டி (படி எடுத்தது) வி.குமாரசாமி 1997
  • 52 திருவெங்கைக் கலம்பகம் (மூலமும் உரையும்) ஆ.சிவலிங்கனார் 1997
  • 53 திருவெங்கை உலா (மூலமும் உரையும்) ஆ.சிவலிங்கனார் 1998
  • 54 ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் தனிப்பாடல்கள் (மூலமும் உரையும்) ஆ.சிவலிங்கனார் 1998
  • 55 ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய தேசிகேந்திர சுவாமிகள் அட்டகம் போற்றிப் பஞ்சகம் ஆ.சிவலிங்கனார் 1999
  • 56 ஸ்ரீலஸ்ரீ சிவஞானபாலய சுவாமிகள் பதிற்றுப்பத்தந்தாதி ஆ.சிவலிங்கனார் 1999
  • 57 திருக்கூவப்புராணம் (மூலமும் உரையும்) ஆ.சிவலிங்கனார் 1999
  • 58 ஸ்ரீ மகான் பசவேசர் பொன்மொழிகள் முதல் பகுதி 1999
  • 59 ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் சீர்த்தி மாலைத்திரட்டு (6 தலைப்புகள்) ஆ.சிவலிங்கனார் 1999
  • 60 ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் பனுவல் திரட்டு (மூலமும் - உரையும்) (2 தலைப்புகள்) ஆ.சிவலிங்கனார் 2000
  • 61 ஸ்ரீ சிவஞான பாலய தேசிகர் மும்மணிக்கோவை ஆ.சிவலிங்கனார் 2000
  • 62 ஸ்ரீ சிவஞான பாலய தேசிகர் நூற்றிரட்டு மூலம் (5 நூல்கள் தொகுப்பு) 2000
  • 63 ஸ்ரீ மகான் பசவேசரின் பொன்மொழிகள் 101 இரண்டாம் பகுதி 2000
  • 64 ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் பிள்ளைத் தமிழ் (மூலமும் உரையும்) ஆ.சிவலிங்கனார் 2000
  • 65 ஒருவாறும் இன்றி பாடல் விளக்கம் (ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள் பிள்ளைத் தமிழ் பாடல் விளக்கம்) ஆ.சிவலிங்கனார் 2001
  • 66 கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசர் செந்தமிழ நூல்களில்; திருக்குறள் ஆட்சி ஆ.சிவலிங்கனார் 2002
  • 67 கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள் நன்னெறி வெண்பா நாற்பது (மூலமும் உரையும்) ஆ.சிவலிங்கனார் 2002
  • 68 ஸ்ரீமகான் பசவேசான் பொன்மொழிகள் நான்காம் பகுதி 2003
  • 69 குருகுகேசம் 1 வை.ரத்தினசபாபதி 2003
  • 70 நல்லாற்றூர் சிவப்பிரகாச சுவாமிகள் செந்;தமிழ் நூல்களில் கற்பனைகள் ஆ.சிவலிங்கனார் 2003
  • 71 ஸ்ரீ மகான் பசவேசரின் பொன்மொழிகள் 3 ஆம் பகுதி
  • 72 சோணசைல மாலை (மூலமும் உரையும்) க.விநாயகம், மா.சற்குணம் 2003
  • 73 நல்லாற்றூர் - துறைமங்கலம் கற்பனைக் களஞ்சியம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் செந்தமிழ் நூல்கள் (இரண்டு தொகுதிகள்) 2004
  • 74 குருகுகேசம் - 2 வை.ரத்தினசபாபதி 2005
  • 75 நால்வர் நான்மணிமாலை மூலமும் உரையும் 2005
  • 76 ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் வரலாறு 2005
  • 77 சோணசைல மாலை (மூலமும் உரையும்) பகுதி 2 க.விநாயகம் மா.சற்குணம் 2005
  • 78 இட்டலிங்க பெருமாள் தோத்திரத்திட்டு (5 நூல்கள் தொகுப்பு) 2005
  • 78 பசவேசர் பொன்மொழிகள் - 5 2008
  • 79 பசவேசர் பொன்மொழிகள் - 6 2009
  • 80 பசவேசர் பொன்மொழிகள் - 7 2010
  • 81 பரசிவப் பாமாலை 2011
  • 82 பிரபுலிங்க லீலை மூலமும் - உரையும் அடிகளாசிரியர் 2013[1]
  • 83 சித்தரும் சிவஞானியும் ஆ.சிவலிங்கனார் 2013
  • 84 மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ் வ. வைத்தியநாததேசிகர் 2013
  • 85 குருகுகேசம் - 3 வை.இரத்தினசபாபதி 2013

மேற்கோள்கள்

தொகு