மரகதம் பெரில் (Be3Al2(SiO3)6,) வகையைச் சேரந்த ஒரு கனிமம் ஆகும். மரகதம் நவரத்தினங்களுள் ஒன்றாகும். இதில் மிகச்சிறிய அளவில் காணப்படும் குரோமியம், சிலவேளைகளில் மட்டும் அடங்கும் வனேடியம் மூலகங்களால் பச்சை நிறத்தைப் பெறுகிறது.[1]

மரகதம்
பொதுவானாவை
வகைபெரில் வகை
வேதி வாய்பாடுபெரிலியம் அலுமினியம் சிலிகேட் மற்றும் குரோமியம், Be3Al2(SiO3)6::Cr
இனங்காணல்
நிறம்பச்சை
படிக இயல்புஅறுகோணிப் பளிங்குகள்
படிக அமைப்புஅறுகோணி
பிளப்புPoor Basal Cleavage (Seldom Visible)
முறிவுConchoidal
மோவின் அளவுகோல் வலிமை7.5 - 8.0
மிளிர்வுVitreous
கீற்றுவண்ணம்வெள்ளை
ஒப்படர்த்தி2.70 - 2.78
ஒளிவிலகல் எண்1.576 - 1.582
பலதிசை வண்ணப்படிகமைDistinct, Blue-Green/Yellow-Green

பெரில் ஒரு பொருளின் உறுதியை அளக்கும் அளவீட்டு முறையில் 10 வரை அளவீட்டைக் கொண்ட மோவின் உறுதி எண் முறையில் உறுதி எண் 7.5 தொடக்கம் 8 வரையான உறுதியெண்ணைக் காட்டுகின்றது.[1] கூடுதலான பச்சைக்கற்கள் உள்ளீட்டுப் பொருட்களைக் கொண்டிருக்கும். எனவே அவற்றின் நொறுங்குமை கூடுதலாகக் காணப்படுகிறது.

இக்கல்லைக் குறிக்கும் எமரல்ட் (emerald) என்ற ஆங்கிலப் பெயர் பச்சை நிறம் என்ற பொருள்படும் மரகதம் என்ற வடமொழி சொல்லில் இருந்து மருவியதாகும்.[2] ஐந்தரை அடி உயரம் - முழுவதும் விலை மதிப்பிட முடியாத மரகதத் திருமேனி. நடராசர் சிலை திருஉத்தரகோசமங்கையில் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Hurlbut, Cornelius S. Jr, & Kammerling, Robert C., 1991, Gemology, p. 203, John Wiley & Sons, New York
  2. Fernie M.D., W.T. (1906). Precious Stones for Curative Wear. John Wright. & Co.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரகதம்&oldid=2958987" இலிருந்து மீள்விக்கப்பட்டது