மரணவலி தணிப்புச் சிகிச்சை

மரணவலி தணிப்புச் சிகிச்சை (palliative care[1] ) என்பது தீரா நோய்களால் மரணத் தறுவாயை நெருங்கிய நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிறப்பு மருத்துவ பராமரிப்பு மற்றும் செவிலியர் கவனிப்பு ஆகியவைகொண்ட பல்நோக்கு மருத்துவ அணுகுமுறை ஆகும். நோயாளிகளுக்கு ஏற்படும் வலி, மன அழுத்தம், நோய் உணர்குறி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும் விதமாக இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தச் சிகிச்சையின் நோக்கம் நோயாளி மற்றும் அவரது குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் ஆகும்.[2][3] 2016 ஆம் ஆண்டின் சான்றுகள் இறப்பில் தரத்தின் முன்னேற்றத்தை ஆதரிக்கின்றன.[4]

மரணவலி தணிப்புச் சிகிச்சை என்பது நோயைக் குணப்படுத்தாது என்பதால், தோல்வியுற்ற மருத்துவ முறை என்று அதைப் பற்றி விமர்ச்சிக்கப்படுகிறது, இதற்கு மரணம் என்பது இயற்கையானது, தவிர்க்க முடியாதது. இறக்கும் நிலையில் உரிய ஆதரவைத் தரத் தவறுவதுதான் செயற்கையானது. இறக்கும் நிலையில் நோயாளிக்குத் தேவைப்படும் அரவணைப்பையும் மரணவலி தணிப்புச் சிகிச்சையையும் அளிக்கவேண்டியது மிக அவசியம் என்ற கூற்று உள்ளது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "NCI Dictionary of Cancer Terms". பார்க்கப்பட்ட நாள் 15 July 2014.
  2. "The national agenda for quality palliative care: the National Consensus Project and the National Quality Forum". J Pain Symptom Manage 33: 737–44. June 2007. doi:10.1016/j.jpainsymman.2007.02.024. பப்மெட்:17531914. https://archive.org/details/sim_journal-of-pain-and-symptom-management_2007-06_33_6/page/737. 
  3. "Get Palliative Care". Get Palliative Care. பார்க்கப்பட்ட நாள் 21 November 2014.
  4. Kavalieratos, Dio; Corbelli, Jennifer; Zhang, Di; Dionne-Odom, J. Nicholas; Ernecoff, Natalie C.; Hanmer, Janel; Hoydich, Zachariah P.; Ikejiani, Dara Z. et al. (22 November 2016). "Association Between Palliative Care and Patient and Caregiver Outcomes". JAMA 316 (20): 2104. doi:10.1001/jama.2016.16840. 
  5. பி.டி. ஜோதி தத்தா (28 சூன் 2017). "மரணவலி தணிப்பும் அத்தியாவசியமான சிகிச்சையே!". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 28 சூன் 2017.