மரபணு மாற்றப்பட்ட உணவு பற்றிய சர்ச்சைகள்

தற்காலத்தில் வழமையான பயிர்களும் மரபணு மாற்றுப் பயிர்களும் பயிரிடப்படுகின்றன. இவற்றில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுடனும் அவற்றிலிருந்து பெறப்படும் உணவு மற்றும் பிற உற்பத்திகளுடனும் தொடர்புபட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய விடயங்கள் மரபணு மாற்றப்பட்ட உணவு பற்றிய சர்ச்சைகள் என்ற இக்கட்டுரை மூலம் ஆராயப்படுகின்றன. நுகர்வோர், அரசாங்க உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் விஞ்ஞானிகளால் இச்சர்ச்சைகள் எழுப்பப்பட்டுள்ளன. இவர்கள் மரபணு மாற்றப்பட்ட பயிர்களிலிருந்து பெறப்படும் உணவின் பாவனை, பயிர்களை மீள்விதைத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றிய சர்ச்சைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. உணவுப்பயிர்களின் DNAஐ மாற்றம் செய்வதனால் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் உருவாக்கப்பட்டு அவற்றிலிருந்து மரபணு மாற்றப்பட்ட உணவுகள் விளைச்சலாகப் பெறப்படுகின்றன. எனினும் செயற்கைத் தேர்வு மூலம் (உதாரணமாக மகரந்தமணிகளை இடம் மாற்றி வெவ்வேறு பயிர் வகைகளைக் கலந்து உருவாக்கும் பழமையான விவசாய முறை) மரபணு மாற்றல் தொழில்நுட்பம் அல்ல. அதியுயர் தொழில்நுட்பம் மூலம் சம்பந்தமல்லாத உயிரினங்களின் மரபணுக்களை மாற்றி உருவாக்கலே மரபணு மாற்றல் தொழில்நுட்பமாகும். இத்தொழில்நுட்பம் பற்றிய பல சர்ச்சைகள் உள்ளன. எனினும் இவ்வுணவுகள் நேரடியாக மனிதனில் நோயேற்படுத்துவதில்லை என அறியப்பட்டுள்ளது. எனினும் பொருளாதார ரீதியாகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகின்றது.

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், உணவுகள் மூலம் எதிர்பார்க்கப்படும் நன்மைகள் தொகு

  • உணவு பழுதடைதல் குறைக்கப்படல். உணவு பழுதடைதலை எதிர்க்கும் மரபணுக்களைப் புகுத்துவதன் மூலம் ஆப்பிளின் மரபணு மாற்றப்பட்ட வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • போசாக்குப் பெறுமானத்தை அதிகரித்தல். உலகில் போசாக்கின்மை பிரச்சினையைக் குறைப்பதற்காக தங்க அரிசி போன்ற மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • வறட்சி, குளிர், நைதரசன் பற்றாக்குறை போன்றவற்றைத் தாங்கக்கூடியதாக இருத்தல்.
  • களைநாசினிகளுக்கு எதிர்ப்புத் தன்மையைப் பெற்றிருத்தல்
  • பூச்சிகள், பக்டீரியா மற்றும் தீநுண்மம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பைப் பெற்றிருத்தல்
  • இயற்கை டீசல் போன்ற இயற்கை எரிபொருட் பதிலீடுகளை உருவாக்க உதவல்

பிரதான சர்ச்சைகள் தொகு

சாதாரண பயிர்களின் வித்துக்களைப் பாதித்தல் தொகு

ஏனைய வழமையான பயிர்கள் போலவே மரபணு மாற்றப்பட்ட பயிர்களும் பயிரிடப்படுகின்றன; ஏனைய தாவரங்கள் போலவே இவையும் மகரந்தங்களைப் பரப்புகின்றன. இவ்வாறான மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் வேறாகப் வழமையான பயிர்களிலிருந்து பிரிக்கப்பட்டு பயிரிடப்படுவாதில்லை. பொதுவாக மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் விதைகளை உருவாக்கும் பல்நாட்டுக் கம்பனிகள் இவ்விதைகளின் இரண்டாந் தரம் சாதாரணமாக இனப்பெருக்கும் ஆற்றலை அழித்து விடுகின்றன. அவ்வாறு முளைத்தாலும் இரண்டாந்தரம் இவை நல்ல விளைச்சலைக் கொடுப்பதில்லை. எனவே இவற்றின் மகரந்தங்கள் சாதாரண பயிர்களைக் கருக்கட்டி உருவாகும் வித்துக்களும் நல்ல விளைச்சலைத் தருவதில்லை. எனவே சாதாரண வித்துக்கள் என நம்பி விதைக்கும் மற்றைய விவசாயிகள் பெரும் நட்டத்துக்கு ஆளாகலாம்.

நன்மை பயக்கும் உயிரினங்களைப் பாதித்தல் தொகு

Bacillus thuringiensis (Bt) போன்ற மண் வாழ் பக்டீரியாக்களின் விஷம் சுரக்கும் (மனிதருக்குக் கேடில்லை) மரபணுக்கள் சில மரபணு மாற்றப்பட்ட தாவரங்களில் உட்புகுத்தப்பட்டுள்ளன. இவ்விஷம் இப்பயிர்களைப் பாதிக்கும் பூச்சிகளுக்கு இறப்பை ஏற்படுத்தும். எனினும் பயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாத அல்லது நன்மை விளைவிக்கும் சில உயிரினங்களுக்கும் Bt மரபணு புகுத்தப்பட்டுள்ள பயிர்களால் சுரக்கப்படும் விஷம் ஆபத்தாகலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. உதாரணமாக சில வண்ணத்துப் பூச்சிகள் [1] இவ்விஷத்தால் அழிகின்றன எனக் கண்டறியப்பட்டுள்ளது. தீமை பயக்கும் பூச்சிகளை உண்டு விளைச்சலை அதிகரிக்க உதவும் ஊனுண்ணிகளும் இவ்விஷத்தால் பாதிக்கப்படுகின்றது.

உயிர்ப்பல்வகைமை பாதிப்படைதல் தொகு

நேரடியாகவோ மறைமுகமாகவோ மரபணு மாற்றுப்பயிகள் உயிர்ப் பல்வகைமையைப் பாதிக்கலாம் எனக் கருதப்படுகின்றது. மரபணு மாற்றுப் பயிர்கள் பூச்சிநாசினி, களைநாசினிகளைத் தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும் இதனால் பூச்சிநாசினி மற்றும் களைநாசினிகளின் பாவனை அதிகரித்து உயிர்ப்பல்வகைமை பாதிக்கப்படலாம் எனக் கருதப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவிலும் இந்தியாவிலும் இது தொடர்பாக மரபணு மாற்றப்பட்ட பருத்தியில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், ஐக்கிய அமெரிக்காவை விட இந்தியாவில் உயிர்ப்பல்வைமை அதிகளவாகப் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது[2].

புதிய பீடைகள் உருவாதல் தொகு

Bt பயிர்களுக்கு எதிர்ப்புத்தன்மையுடைய பல்வேறு புதிய பீடைகள் உருவாகியுள்ளன. உதாரணமாக சீனாவில் பயிரிடப்பட்ட Bt பருத்திக்கு எதிர்ப்புத்தன்மையுடைய மைரிட் எனும் பூச்சியினம் விருத்தியடைந்துள்ளது. இந்த மரபணு மாற்றப்பட்ட பருத்தி பயிரிடப்பட்டு சில வருடங்களுக்குள் இது நடைபெற்றது. Bt பருத்தியால் பெறப்பட்ட நன்மைகள் இதனால் சீர்குலைந்தன.

மேற்கோள்கள் தொகு

  1. Losey, John E.; Rayor, Linda S.; Carter, Maureen E. (1999). "Transgenic pollen harms monarch larvae". Nature 399 (6733): 214. doi:10.1038/20338. பப்மெட்:10353241. 
  2. Carpenter JE (2011). "Impact of GM crops on biodiversity". GM Crops 2 (1): 7–23. doi:10.4161/gmcr.2.1.15086. பப்மெட்:21844695.