மரப்பெரணி
மரப்பெரணி (Sphaeropteris excelsa) என்பது மரப்பெரணி அல்லது நோர்ஃபோல்க் மரப்பெரணி என்றழைக்கப்படும் ஒரு தாவர வகையாகும். இதுவே உலகிலேயே மிகப்பெரிய பெரணி வகைத் தாவரமாக இருக்கக்கூடும். இது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு அருகில் பசிபிக் பெருங்கடலில் உள்ள நோர்போக் தீவில் மட்டுமே காணப்படுகிறது. இது தாவரவியலாளர் இராபர்ட் பிரௌன் (1773-1858) என்பவருக்குப் பிறகாக பெயரிடப்பட்டது.
தாவரத்தின் அமைப்பு மற்றும் வாழிடம்
தொகுஇத்தாவரம் தன் இயற்கையான வாழ்விடத்தில், 20 மீட்டர் (66 அடி) அல்லது அதற்கும் அதிகமான உயரத்தை எட்டும்.[1] Tஅகன்ற, ஈட்டி வடிவ, இரட்டைத்துய்க்கிளைகளையுடைய - சிறகுப்பிளவுள்ளது முதல் முத்துய்க்கிளைகளையுடைய ஓலைகள் வரை கொண்டிருக்கும். இந்த ஓலைகள் 5 மீட்டர் (16 அடி) நீளத்தை எட்டும். காம்பானது நீளமானதாகவும் மற்றும் வெள்ளை நிற கோடுகளைக் கொண்டதாகவும் உள்ளது, அதன் நீளவாக்கில் கோடுகள் போன்ற தையல் அமைப்பு உள்ளது. கூட்டிலை நடுக்காம்பு மற்றும் காம்புகள் வெள்ளை-பழுப்பு மற்றும் அடர் ஆரஞ்சு-பழுப்பு செதில்களால் மூடப்பட்டிருக்கும். தண்டு வயதுக்கு ஏற்ப மென்மையாக மாறும். விழுந்த இலைகள் எஞ்சியிருக்கும் நீள்வட்டத்தழும்புகளைக் கொண்டிருக்கலாம்.
இத்தாவரமானது நார்போக் தீவில் உள்ள துணை வெப்பமண்டல மழைக்காடுகளில் இயற்கையாகவே காணப்படுகிறது. கோடை மாதங்களில் சராசரி பகல்நேர வெப்பநிலை சுமார் 23 °C (73 °F) ஐ அடைகிறது, குளிர்காலத்தில் 17 °C (63 °F) ஆகக் குறைகிறது. இந்தச் சூழலில் அனுபவிக்கக்கூடிய அதிகபட்ச வெப்பநிலை 29 °C (84 °F), குறைந்தபட்சம் 6 °C. ஆண்டு முழுவதும் 70 முதல் 80% வரையிலான மிகச்சீரான ஈரப்பதத்தைக் கொண்டுள்ளது. ஆண்டு மழைப்பொழிவு தோராயமாக 1,200 மில்லிமீட்டர்கள் (47 அங்குலம்) ஆகும்.
பாதுகாப்பு
தொகுஒரு காலத்தில் நோர்போக் தீவில் பரந்த,தருந்த காடுகள் இப்போது தேசியப் பூங்காவின் ஒரு பகுதியாக வரையறுக்கப்பட்ட ஒரு சிறிய வனப்பகுதியாக குறைக்கப்பட்டுள்ளன. இந்தப் பூங்காவிற்குள் இத்தாவரமானது பாதுகாக்கப்படுகிறது. இது பல நாடுகளில் விவசாயச் சாகுபடியில் வளரக்கூடியதாக இருக்கிறது. அரிதானதாக இருந்தாலும் அழியும் நிலையில் உள்ளனவாக கருதப்படவில்லை.[2]
சாகுபடி
தொகுSphaeropteris excelsa ஒரு அலங்கார மரமாக பயிரிடப்படுகிறது. இதற்கு கரிமப் பொருட்கள் நிறைந்த நடுநிலைத்தன்மை முதல் சிறிது அமிலத்தன்மை கொண்ட மண் தேவைப்படுகிறது.[3] மண் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும், அதே நேரத்தில் நன்கு வடியக்கூடிய நில அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். இப்பெரணித் தாவரத்தை நீர் தேங்கிய மண்ணில் நிற்க வைத்தால் பாதிக்கப்படும். இத்தாவரத்திற்கு அதிக ஈரப்பதம் மற்றும் அதிக மழை அல்லது நல்ல நீர்ப்பாசன வசதி தேவைப்படுகிறது. கோடை மாதங்களில், மிகவும் தொட்டியில் வளர்க்கப்படும் ஒரு இளஞ்செடி கூட ஒரு நாளைக்கு 0.5 லிட்டர் தண்ணீரை உட்கொள்ளும்.
ஸ்பேரோப்டெரிஸ் எக்செல்சாவுக்கு நல்ல வெளிச்சம் தேவைப்படுகிறது, ஆனால் நாளின் வெப்பமான பகுதிகளில் நிழலாடும் போது சிறப்பாக வளர்கிறது. இது உரமிடும்போது நன்கு விளைச்சலை அளிக்கிறது, ஆனால், சில வணிக உரங்கள் முறையற்ற ஓலைகளைக் கொண்ட ஒரு பெரிய ஆனால் பலவீனமான தாவரத்தை உருவாக்கக் கூடும். இது லேசான உறைபனிகளை மட்டுமே தாங்கும். பெரிய தாவரங்கள் ஒரு இரவில் மைனஸ் மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வாழக்கூடும்.
பிரிட்டன் போன்ற நாடுகளில் இது கண்ணாடிக் காப்பகங்களில் சிறப்பாக வளர்க்கப்படுகிறது. இத்தாவரத்தின் பெரிய அளவு இவ்வாறான வளர்ப்பு முறைக்கு நடைமுறைச் சிக்கல்களைத் தருகின்றது. ஒரு அழகான மற்றும் பலனளிக்கும் தாவரம் குளிர் பிரதேசங்களில் வளர்க்கப்படும்போது, இத்தாவரத்தின் ஆர்வலர்கள் கண்டிப்பாக அர்ப்பணிப்புடன் கவனித்து வளர்க்க வேண்டியுள்ளது.
இது வித்துகளிலிருந்து எளிதில் வளர்க்கப்படுகிறது. இத்தாவரம் இளமையாக இருக்கும்போது மிக வேகமாக வளரும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Norfolk Tree Fern (Cyathea brownii)". Onszaden. பார்க்கப்பட்ட நாள் 24 November 2022.
- ↑ "Sphaeropteris excelsa". San Francisco Botanical Garden. பார்க்கப்பட்ட நாள் 24 November 2022.
- ↑ "Sphaeropteris Species, Norfolk Island Tree Fern, Norfolk Tree Fern, Smooth Tree Fern". Dave's Garden. பார்க்கப்பட்ட நாள் 28 February 2023.