மரமும் கனியும்

மரமும் கனியும் என்பது இயேசுவின் உவமைகளுள் ஒன்றாகும். புதிய ஏற்பாட்டின் இரு நற்செய்தி நூல்களில் இது இடம்பெறுகின்றது. மத்தேயு 7:15–20 மற்றும் லூக்கா 6:43-45இல் இவ்வுவமை இடம் பெறுகின்றது. இதன் ஒரு வகை விவிலிய திருமுறையில் இடம்பெறாத தோமா நற்செய்தியில் 45ஆம் வசணத்தில் காணக்கிடைக்கின்றது.[1]

உவமையின் விவரிப்பு

தொகு

மத்தேயு நற்செய்தியில் இவ்வுவமை பின்வருமாறு உள்ளது:

'போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள். அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா? நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது. கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுக்க இயலாது. நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும். இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.

மத்தேயு 11:21-22, பொது மொழிபெயர்ப்பு

லூக்கா நற்செய்தியில் இவ்வுவமை பின்வருமாறு உள்ளது:

' கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை. நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.

லூக்கா 6:43-45, பொது மொழிபெயர்ப்பு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரமும்_கனியும்&oldid=1471785" இலிருந்து மீள்விக்கப்பட்டது