மரினோ மோரிகவா
மரினோ மோரிகவா (Marino Morikawa) பெரு-சப்பானிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் விஞ்ஞானியாவார். இவர் 1977 ஆம் ஆண்டு பிறந்தார். பெருவில் ஈடுபட்ட சுற்றுச்சூழல் பணிகளுக்காக நன்கு அறியப்படுகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
தொகுபெருநாட்டிலுள்ள சிறிய நகரமான சாங்கேயில் மரினோ பிறந்தார். பல்துறை உயிரின அரசியல் தந்திரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். சப்பானின் திசுகூபா பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியலில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.[1] [2] [3]
தொழில்
தொகுதேசிய புவியியல் தொலைக்காட்சியின் செய்தி அறிக்கையில் இடம்பெற்றபோது இவரது பணி நன்கு அறியப்பட்டது. சொந்த ஊரான பெருவின் சாங்கேயில் எல் காசுகாயோ ஏரியை மீட்டெடுப்பது குறித்த இவரது பணி குறித்த அறிக்கை அச்செய்தி அறிக்கையில் உள்ளடங்கியிருந்தது.[4] [5] [6] [7]
மரினோ மோரிகாவா நானோபிளசு 7 என்ற தனது சொந்த நிறுவனத்தை நிறுவினார். இது நீர்நிலைகளை மாசுபடுத்துவதற்கு எதிராக அர்ப்பணிக்கப்பட்டது. [2] மரினோ மோரிகாவா உலகம் முழுவதும் 30 வாழ்விடங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது, இவர் ஈக்வடார் ஆண்டிசில் உள்ள சிரா நதியின் மாசுபாட்டை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் பெருவில் உள்ள டிடிகாகா, உவாகேச்சினா மற்றும் ஆலலே ஏரிகளையும் மாசுபாட்டிலிருந்து காக்கவும் முயற்சித்து வருகிறார். [2] [5] [7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Master's Program in Interdisciplinary Biodiplomacy". University of Tsukuba English Programs (in ஆங்கிலம்). 2014-08-19. Archived from the original on 2020-10-27. பார்க்கப்பட்ட நாள் 2020-10-24.
- ↑ 2.0 2.1 2.2 "Marino Morikawa, el peruano que descontaminó una laguna en 15 días, ahora va por el Titicaca". Útero.Pe (in ஆங்கிலம்). 2016-06-29. பார்க்கப்பட்ட நாள் 2020-10-24."Marino Morikawa, el peruano que descontaminó una laguna en 15 días, ahora va por el Titicaca". Útero.Pe. 2016-06-29. Retrieved 2020-10-24.
- ↑ "Environmentalist Marino Morikawa: A Dreamer in Action By Rosa Alicia Castillo – Dawson English Journal". www.dawsonenglishjournal.ca. பார்க்கப்பட்ட நாள் 2020-10-24.
- ↑ "NAT GEO Recuperación del humedal 'El cascajo' de Chancay Lima - Peru". November 5, 2013.
- ↑ 5.0 5.1 "Marino Morikawa, el científico peruano que usó la ciencia para limpiar un humedal". EcoInventos (in ஸ்பானிஷ்). 2020-06-12. பார்க்கப்பட்ட நாள் 2020-10-24.
- ↑ How This Guy Cleaned a Lake! (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2020-10-24
- ↑ 7.0 7.1 "El peruano Marino Morikawa nos cuenta cómo Latinoamérica puede cambiar su tradición de estropear la naturaleza". www.americaeconomia.com (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-24.