மரியம் சுல்தானா
மரியம் சுல்தானா (Mariam Sultana) ஒரு பாக்கித்தானிய வானியற்பியலாளர் ஆவார்.
இவர் 2912 இல் கராச்சி பல்கலைக்கழகத்தில் நூரிதினோவ் சலோகித்தின் நாசுரிதினோவிச் வழிகாட்டுதலில் வானியற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். பாக்கித்தானில் வானியற்பியலில் இவர்தான் முதன்முதலில் முனைவர் பட்டம் ஈட்டியர்.[1] இவர் கூட்டு உருது கலை, அறிவியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழக (FUUAST) உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.[2]
வாழ்க்கை
தொகுஇவர் பாக்கித்தனிலேயே பெரிய மாநகரமாகிய கராச்சியில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். இவர் 2004 இல் கராச்சி பல்கலைக்கழகத்தில் பயன்முறை கணிதவியலில் முதுவர் பட்டம் பெற்றவர்..[3]இவர் தன் முனைவர் பட்ட ஆய்வை 2006 இல் சலோகித்தின் நாசுரிதினோவ் வழிகாட்டுதலின்கீழ் தொடங்கினார்.[3] இவ வானியற்பியலில் 2012 இல் முனைவர் பட்டத்தைப் பெற்றார். இவர் புறப்பால்வெளி ஆய்வில் ஈடுபடுகிறார். இவர் வலயப் பால்வெளி உருவாக்கத்திலும் நிலைப்பிலும் கவனத்தைக் குவிக்கிறார்.[3] Her doctoral thesis was examined by James Binney and Ana Katrin Schenk.[4]
தகைமைகளும் விருதுகளும்
தொகுஇவர் 2015 இல் பாக்கித்தானியக் கொக்கோ கோலா குழும முதன்மை வெற்ரி விருதை வென்றுள்ளார்.[5] இவர் பன்னாட்டு ஆய்விதழ்களில் 34 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவை 64 தடவைகளுக்கு மேல் சான்று காட்டப்பட்டுள்ளன.[6] இவர் முதல் பாக்கித்தானியப் பெண் வானியற்பியலாளர் ஆவார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "One Doctorate Too Many". Newsline (in ஆங்கிலம்).
- ↑ 2.0 2.1 "Department of Mathematics – FUUAST". fuuast.edu.pk.
- ↑ 3.0 3.1 3.2 Siegel, Ethan (3 September 2015). "Throwback Thursday: Pakistan's First Female Astrophysics Ph.D." Medium (in ஆங்கிலம்).
- ↑ Siegel, Ethan (3 September 2015). "Throwback Thursday: Pakistan’s First Female Astrophysics Ph.D." (in en). Medium. https://medium.com/starts-with-a-bang/throwback-thursday-pakistan-s-first-female-astrophysics-ph-d-f018c70b5770.
- ↑ "Coca-Cola holds 'S&S Awards'". Business Recorder. 4 October 2015.
- ↑ "Mariam Sultana".
- ↑ "First Pakistani woman to earn PhD in astrophysics fought red tape". The Express Tribune. July 28, 2012.