மரியம் நசீமா

மாலைத்தீவின் திரைப்பட நடிகை

மரியம் நசீமா (Mariyam Nazima) மாலைத்தீவைச் சேர்ந்த திரைப்பட நடிகையாவார்.

இவர், மாலைத்தீவின் மாலேவில் பிறந்தார்.[1] இவர் ஒரு விளம்பரம் மூலம் திரையில் அறிமுகமானார்.[1] அதன் பிறகு, அப்துல்லா சுஜாவ் இயக்கிய "பென்னாதி பலன்யா லோபின்" என்ற நிகழ்படம் மூலம்திரையில் தோன்றினார். இவருடன் வடிவழகர் அப்துல்லாவும் நடித்திருந்தார்.[1]

தொழில் தொகு

ஈசா செரீப் என்பவர் இயக்கி வெளியான எம்மே பாஹு துவாஸ் (1997) என்ற திரைப்படத்தில் ஒரு குழப்பமான காதலியாக இவர் அறிமுகமானார். இதில் இரீகோ மூசா மாணிக், அசன் அபீப் , நியுமா முகமது ஆகியோரும் நடித்திருந்தனர். இதில் பொய்யான குற்றச்சாட்டுகளை உருவாக்கியும், தவறாக வழிநடத்தியும் தனது தோழியின் நடக்கவிருக்கும் திருமணத்தை நிறுத்தும் ஒரு வஞ்சகமான பெண் வேடத்தில் நடித்திருந்தார்.[2] அடுத்ததாக இவர், முகமது அலி மாணிக்கின் இயக்கத்தில் மாஜீ (2000) என்ற படத்தில் இஸ்மாயில் வஜீஹ், ஜம்ஷீதா அகமது, அமினாத் ரசீதா ஆகியோருடன் இணைந்து நடித்தார். இது சிறுவயதில் பிரிந்து பெரியவர்களாக மீண்டும் இணைந்த இரண்டு சிறந்த நண்பர்கள் கதையை விவரிக்கிறது.[3] இப்படத்தில் தனது முதலாளியுடன் காதல் கொள்ளும் சமா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.[4] மரியம் சாக்கியின் பரவலாகப் பாராட்டப்பட்ட குடும்ப நாடகத் தொலைக்காட்சித் தொடரான காத்திரி அடுத்த ஆண்டு வெளியிடப்பட்டது, இதில் இவர் நெரிசலான வீடுகள் அடங்கிய வளாகத்தில் வசிக்கும் பல சமூகப் பிரச்சினைகளைக் கையாளும் சகிப்புத்தன்மை கொண்ட இரண்டாவது மனைவியாக நடித்தார்.[5]

2000 ஆம் ஆண்டில், அஜாரா அப்துல் கரீம் இயக்கத்தில் அஜாய்ப் என்ற படத்தில் அகமது அசிம், கொய்யா அசன் மாணிக், வலீதா வலீத் ஆகியோருடன் நடித்தார்.[6] அடுத்து யூசப் சபியு, அலி சீசன் ஆகியோருடன் முகமது ரசீத்தின் இயக்கத்தில் ஹித்து விந்து (2000) என்ற படத்தில் ஊனமுற்ற ஆணை தயக்கத்துடன் திருமணம் செய்து கொள்ளும் ஒரு வேடத்தில் நடித்திருந்தார்.[7]

2001ஆம் ஆண்டில், நதாசாவாக நடித்தார். பாத்திமத் நகுலாவின் இயக்கத்தில் நாவுமீது (2000) என்ற நாடகத் திரைப்படத்தில் நடித்தார். இது ஒரு மகிழ்ச்சியான திருமணமான தம்பதியரின் கதையை சித்தரிக்கிறது. அவர்களின் வாழ்க்கையில் ஒரு கவர்ச்சியான பெண் குறிக்கிடும் போது வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை விவரிக்கிறது.[8] இந்த படம் விமர்சகர்களிடமிருந்து சாதகமான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த மாலத்தீவு திரைப்படமாக உருவெடுத்தது.[9] சிமாவ் இயக்கிய குடும்ப நாடகத் திரைப்படமான லோபி நுவெவுனுனாமா (2002) என்ற படத்தில் யூசுப் சாபியு, மரியம் நிஷா, மூசா ஜகாரியா , அகமது சிமாவ் ஆகியோருடன் பணத்தின் மீது பேராசை கொண்ட பெண்ணாக இவர் நடித்திருந்தார்.[8] பாத்திமத் நகுலாவால் எழுதப்பட்ட இந்த கதை, காதலில் காட்டிக் கொடுக்கப்பட்ட ஒரு ஊனமுற்ற மனிதனின் பயணத்தை விவரிக்கிறது.[8] படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.[10] அடுத்த ஆண்டு, இமாத் இசுமாயில் இயக்கிய அரமகு தொங்கமனா (2003) என்ற படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணாக நடித்தார்.[11] கடலில் இருந்து எழுந்த ஒரு பெண் ஆவியின் கதையை விவரிக்கிறது. ஆவி ஒரு மனிதனாக வேடமிட்டு, ஒரு களை எடுப்பவரை திருமணம் செய்து கொள்கிறது.[11]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Nadheem, Ahmed (23 February 2012). "Top 10 Actresses in Malives" (in Divehi). Haveeru இம் மூலத்தில் இருந்து 5 March 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120305014312/http://www.haveeru.com.mv/dhivehi/entertainment/117464. பார்த்த நாள்: 26 November 2018. 
  2. Nadheem, Ahmed (25 January 2012). "10 reasons why Fathis Handhuvaru was liked by audience" (in Divehi). Mihaaru இம் மூலத்தில் இருந்து 8 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181208061440/https://archive.mv/dv/articles/lgeG8. பார்த்த நாள்: 3 December 2018. 
  3. Ifraz, Ali (23 September 2018). "Wajeeh and Jamsheedha reunites at polling location" (in Divehi). Avas இம் மூலத்தில் இருந்து 1 January 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20190101113315/https://avas.mv/54536. பார்த்த நாள்: 1 January 2019. 
  4. Rasheed, Ahmed (16 August 2018). "Wants to play an action movie: Ismail Wajeeh" (in Divehi). Mihaaru இம் மூலத்தில் இருந்து 9 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180209173345/http://www.muniavas.com/4278. பார்த்த நாள்: 22 December 2018. 
  5. Ali, Ifraz (1 October 2019). "Where are all the drama series?" (in Divehi). Dho? இம் மூலத்தில் இருந்து 28 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201028162243/https://dho.mv/baiscope/62237. பார்த்த நாள்: 28 October 2020. 
  6. Nadheem, Ahmed (16 February 2012). "Top 10 Actors in Maldives" (in Divehi). Haveeru இம் மூலத்தில் இருந்து 19 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140219100014/http://www.haveeru.com.mv/dhivehi/entertainment/117146. பார்த்த நாள்: 26 November 2018. 
  7. Adhushan, Ahmed (23 November 2017). ""Thiya Loaibaa Dhurah" might turn out to be a beautiful romantic film" (in Divehi). Mihaaru. https://mihaaru.com/entertainment/27018. பார்த்த நாள்: 18 September 2018. 
  8. 8.0 8.1 8.2 "Gaumee Inaam 2009 - Fathimath Nahula" (in Divehi). Presidency Maldives இம் மூலத்தில் இருந்து 3 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181203081921/http://inaamu.presidencymaldives.gov.mv/Index.aspx?lid=177&wid=186. பார்த்த நாள்: 3 December 2018. 
  9. Nadheem, Ahmed (6 September 2015). "Nahula Vs Tedry: Who among the two brought a revelation to Maldivian Cinema?" (in Divehi). Avas இம் மூலத்தில் இருந்து 8 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150908184812/https://avas.mv/7801. பார்த்த நாள்: 3 December 2018. 
  10. Adhushan, Ahmed (9 July 2018). "Empowering women in cinema" (in Divehi). Dho? இம் மூலத்தில் இருந்து 3 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181203082808/https://dho.mv/baiscope/35686. பார்த்த நாள்: 3 December 2018. 
  11. 11.0 11.1 Adhushan, Ahmed (24 February 2018). "Who are the most profitable producers?" (in Divehi). Mihaaru இம் மூலத்தில் இருந்து 4 January 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20190104074535/https://mihaaru.com/entertainment/31518. பார்த்த நாள்: 4 January 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியம்_நசீமா&oldid=3271487" இலிருந்து மீள்விக்கப்பட்டது