மரியா அகமது தீதி

மாலைத்தீவின் அரசியல்வாதி

மரியா தீதி (Mariya Didi) (பிறப்பு ஆகஸ்ட் 18,1962) மாலைத்தீவுகளின் பாரிஸ்டரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் மாலைத்தீவுகளின் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றினார்.[2] 2018 தேர்தலின் போது அரசுத் தலைவர் இப்ராகிம் முகமது சோலிகின் பிரச்சார மேலாளராக இருந்த பிறகு, இவர் நாட்டின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2]

மரியா அகமது தீதி
Mariya Ahmed Did
மாலைத்தீவுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்
பதவியில்
17 நவம்பர் 2018 – 17 நவம்பர் 2023[1]
குடியரசுத் தலைவர்இப்ராகிம் முகமது சாலி
முன்னையவர்ஆதம் செரீப்
பின்னவர்முகமது காசன் மௌமூன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 18, 1962 (1962-08-18) (அகவை 62)
தேசியம்மாலைத்தீவைச் சேர்ந்தர்வர்
அரசியல் கட்சிமாலைத்தீவுகளின் ஜனநாயக் கட்சி
பிள்ளைகள்1 மகள், 2 மகன்கள்

மரியா தீதி, பாதுகாப்பு அமைச்சராக தனது துறையில் தேசிய பாதுகாப்புப் படை, தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம்,[3] தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்,[4] மாலைத்தீவுகளின் சுங்கச் சேவை,[5] மாலைத்தீவுகளின் குடிவரவு,[6] விமானப் பாதுகாப்பு,[7] ஆட்கடத்தல் தடுப்பு [8]பு, மற்றும் மாலைத்தீவுகளின் நீர்வளச் சேவை[9] போன்ற முக்கிய துறைகளை மேற்பார்வையிடுகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

தொகு

கல்வி

தொகு

மரியா தீதி இங்கிலாந்தின் வேல்ஸில் உள்ள அபெரிஸ்ட்வித் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.[2] இவர் இங்கிலாந்தில் தனது தொழில்முறை தகுதிகளை முடித்தார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு அழைக்கப்பட்ட முதல் இரண்டு பாரிஸ்டர்களில் இவரும் ஒருவர். இங்கிலாந்தின் புகழ்பெற்ற கிரேஸ் விடுதியின் பாரிஸ்டர் ஆனார். பிரிஸ்டலில் உள்ள ஆல்பியன் சேம்பர்ஸில் தனது மாணவர் படிப்பை முடித்தார்.

மரியா தீதி முகமது அமீர் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.[2]

தொழில்

தொகு

மாலைத்தீவுகளின் சட்டம்னற அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், முன்னணி மனித உரிமை ஆர்வலருமான மரியா தீதி மாலைத்தீவுகளின் முதல் பெண் வழக்கறிஞரும் ஆவார். தொடர்ந்து 4 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2008 அரசியலமைப்பின் வரைவுக் குழுவில் அமர்ந்தார். 2007 ஆம் ஆண்டில், மாலைத்தீவுகளில் ஜனநாயகம் , மனித உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகளை மேம்படுத்தும் பணிக்காக இவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரால் இவருக்கு சர்வதேச வீரதீரப் பெண்கள் விருது வழங்கப்பட்டது.[10][11]

மாலைத்தீவுகளின் மிகப்பெரிய அரசியல் கட்சியான மாலைத்தீவுகள் ஜனநாயகக் கட்சியின் தலைவராக மரியா தீதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தலைமையின் கீழ், 2008 இல் மாலைத்தீவில் நடைபெற்ற பல கட்சி ஜனநாயக அதிபர் தேர்தலில் கட்சி வெற்றி பெற்றது. தேர்தல் வெற்றி முந்தைய 30 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, மாலைத்தீவுகளில் ஜனநாயகத்தை நிறுவியது.[12]

மாலைத்தீவுகள் தேசிய பாதுகாப்பு படையின் 130 ஆண்டுகால நீண்ட வரலாற்றில் எந்த நேரத்திலும், அதன் ஆலோசனைக் குழுவில் பெண் உறுப்பினர்களே இல்லை. மரியா தீதி லெப்டினன்ட் கர்னல்களின் உறுப்பினர்களை அனுமதிக்க சபையின் மறுசீரமைப்பைத் தொடங்கினார். அதன் பிறகு முதல் முறையாக 2 பெண் லெப்டினன்ட் கர்னல்களை படையில் நியமித்தார். 3 பெண் அதிகாரிகள் லெப்டினன்ட் கர்னல் பதவிக்கு உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு படையின் முடிவெடுக்கும் உயர் மட்டத்தில் பெண் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான ஒரு பணியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.[13]

கோவிட் பெருந்தொற்று

தொகு

அதிபர் இப்ராகிம் முகமது சாலியின் வழிகாட்டுதலின் கீழ், 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாலைத்தீவு அரசாங்கத்தின் கோவிட்-19 தடுப்பு முயற்சியின் முன்னணி முகமாக மரியா தீதி மாறினார். பொது சுகாதார அவசரநிலை முதன்முதலில் அறிவிக்கப்பட்ட மார்ச் 2020 முதல், அது குறைக்கப்படும் வரை ஜூலை தொற்றுநோயைச் சமாளிக்க நாடு முழுவதும் பல வசதிகளை அமைப்பதை மேற்பார்வையிட்டார்.[14]

மேற்கோள்கள்

தொகு
  1. "Rajnath congratulates Maumoon on appointment as Maldives Defence Minister". The Print. 17 November 2023. https://theprint.in/india/rajnath-congratulates-maumoon-on-appointment-as-maldives-defence-minister/1849502/. 
  2. 2.0 2.1 2.2 2.3 "Minister of Defence Uza. Mariya Ahmed Didi - MNDF". mndf.gov.mv. Archived from the original on 27 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-03-10.
  3. "A special session of Counter Terrorism Steering Committee and Counter Radicalisation committee held". Nahonal Counter Terrorism Centre. 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 23 December 2023.
  4. "Disaster risk mitigation, adaptation and resilience are directly linked to the Government's overall vision for the defence of Maldives – Minister Mariya". gov.mv (in ஆங்கிலம்). Ministry of Defense. 2022-06-12. பார்க்கப்பட்ட நாள் 2023-12-23.
  5. Mohamed, Naizak (17 September 2021). "Mariya: Work done by Customs is integral to national security". Sun. https://en.sun.mv/69180. 
  6. "Maldives Immigration hosted the first national level border security symposium". Maldives Immigration. 26 October 2022. பார்க்கப்பட்ட நாள் 23 December 2023.
  7. "Minister: AVSECOM's biggest challenge – having to operate under civil service". Sun. 19 November 2022. https://en.sun.mv/79138. 
  8. "Ministry of Defence issues statement on World Day against Trafficking in Persons 2021". gov.mv. Ministry of Defence. 30 July 2021. பார்க்கப்பட்ட நாள் 23 December 2023.
  9. "3rd Joint Hydrographic Survey in Maldives: 19 Jan – 26 Feb 2023". Embassy / High Commission / Consulate General of India. பார்க்கப்பட்ட நாள் 23 December 2023.
  10. Lansford, Tom, ed. (2015). Political Handbook of the World 2015. SAGE Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781483371559.
  11. "Maldivian wins 'International Woman of Courage' award". Maldivian Democratic Party (in ஆங்கிலம்). 2007-03-08. பார்க்கப்பட்ட நாள் 2023-10-18.
  12. Nazeer, Ahmed (June 6, 2022). "The Maldives: From Dictatorship to Constitutional Democracy and the Quest for Consolidation". The University of Portsmouth Research Portal. https://pure.port.ac.uk/ws/portalfiles/portal/67543305/The_Maldives_From_Dictatorship_to_Constitutional_Democracy_and_the_Quest_for_Consolidation.pdf. 
  13. "Female officers making unprecedented progress: Defence Minister". PSM News. 21 April 2022. https://www.psmnews.mv/en/101625. 
  14. Rasheed, Hanaan (February 1, 2021). "Women lead Maldives' Covid-19 response to hopeful shore of immunization". raajje.mv. https://raajje.mv/94707. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_அகமது_தீதி&oldid=3915697" இலிருந்து மீள்விக்கப்பட்டது