மரியா இரெபினெட்ஸ்கா

உக்ரைனிய மற்றும் உக்ரைனிய அமெரிக்கப் பாடகி (1883-1972)

மரியா ஜினோவிவ்னா இரெபினெட்ஸ்கா (Maria Zinovievna Hrebinetska, 1883-15 ஆகத்து 1972) என்பவர் ஒரு உக்ரேனிய-அமெரிக்க நாடக நடிகையும், பாடகியும் (சோப்ரானோ) ஆவார். இவர் மைகோலா சடோவ்ஸ்கி நாடக அரங்கு, ஒடெசா ஓபரா ஹவுஸ் மற்றும் எல்விவில் உள்ள ருஸ்கா பெசிடா நாடக அரங்கு ஆகியவற்றில் நடித்ததற்காக அறியப்படுகிறார்.

துவக்ககால வாழ்க்கையும் கல்வியும்

தொகு

மரியா உரிசியப் பேரரசின் கீவ் நகரில் (தற்போது உக்ரைனில் உள்ளது) 1883 ஆம் ஆண்டு பிறந்தார்.[1] இவரது பெற்றோர் - உக்ரேனிய மொழி மற்றும் இலக்கிய ஆசிரியர்களாக இருந்தனர். பொருளாதார ரீதியாக வசதியாக இருந்தனர். அதனால் தங்கள் மகளுக்கு நல்ல கல்வியை அவர்களால் வழங்க முடிந்தது. லெஸ்னெவிச்-நோசோவா நடத்திய ஒரு தனியார் இசைப் பள்ளியில் இரெபெனெட்ஸ்கா பயின்றார். மேலும் 1905 முதல் 1907 வரை, ஒலெக்சாண்டர் மைசுகாவின் கீழ் மைகோலா லைசென்கோ இசை மற்றும் நாடகப் பள்ளியில் பயின்றார்.[2] லைசென்கோ பள்ளியில் மிகச் சிறந்த பாடகிகளில் ஒருவராக அரெபினெட்ஸ்கா கருதப்பட்டார்.[3] ஒலெக்சாண்டர் மைசுகாவின் பரிந்துரையின் பேரில்,[4] இரெபினெட்ஸ்கா தனது திறமைகளை மேம்படுத்துவதன் பொருட்டு மிலனுக்குச் சென்று அங்கு 1907 முதல் 1911 வரை பாடல் பயின்றார்.[5]

இவர் தன் சிறந்த ஆசிரியரின் ஆலோசனையை அவ்வப்போது மனதில் நினைத்துக் கொண்டார்: "உலகப் புகழ் பெற்ற பாடகியாக ஆவதற்கு, கலைக்காக எல்லாவற்றையும் துறந்தால், உக்ரேனியரான மரியா கிரெபெனெட்ஸ்கா என்று எல்லோரும் அறிந்து கொள்வார்கள் - இதுவே வாழ்க்கை. குரல் வளம், இசை, பொருத்தமான தோற்றப் பொலிவு, புத்திசாலித்தனம், இளமை போனவை உள்ளன."[6]

தொழில்

தொகு

1911 இல் படித்து பட்டம் பெற்ற பிறகு, இரெபினெட்ஸ்கா ஒடேசா ஓபரா ஹவுசில் ஒரு தனிப்பாடகராக ஆனார்.[7] இவர் 1912 வரை ஒடேசா ஓபரா ஹவுஸில் தனிப்பாடகராக பணியாற்றினார்.[8]

1914 ஆம் ஆண்டில், இரெபினெட்ஸ்கா கீவில் உள்ள மைக்கோலா சடோவ்ஸ்கி அரங்கில் தனிப்பாடகராக ஆனார். அங்கு இவர் அனைத்து உச்சஸ்தாயி பாடகர் பகுதிகளையும் பாடினார்.[9]

அந்த நேரத்தில், ஒரு சிறந்த பாடகியாக இருந்தார் என்றாலும், ஒரு மரியா நாடக நடிகையாக அனுபவம் பெற்றிருக்கவில்லை. பிரபல இசையமைப்பாளரும் பாடகர் குழுவின் நடத்துனருமான ஒலெக்சாண்டர் கோஷிட்ஸ் நினைவு கூர்கையில், " லைசென்கோவின் 'கிறிஸ்துமஸ் இரவு' நிகழ்ச்சியை நடத்துவதற்கான வேலை மிகவும் கடினமாக இருந்தது. விசயம் என்னவென்றால், எங்களிடம் உண்மையில் ஒரே ஒரு கலைஞரும் பாடகருமான, டெனர் வ்னுகோவ்ஸ்கி மட்டுமே இருந்தார். குழுவில் மீதமுள்ளவர்கள் அனைவரும் நாடக நடிகர்கள் அல்லது இசைக் கல்வியைப் பெற்றவர்கள், ஆனால் இன்னும் மேடையேராதவர்களாக இருந்தனர். இதில் முக்கிய கதாநாயகியாக மரியா இரெபெனெட்ஸ்காவும், பாஸ் எச். ஆர். மரியா ஹ்ரெபெனெட்ஸ்கா ஆகியோர் இருந்தனர். மரியா இரெபெனெட்ஸ்கா மிகவும் நல்ல, உச்சஸ்தாயி பாடகியாகவும், நன்கு பயிற்சி பெற்றவராகவும் இருந்தார். எனவே, இந்த விஷயத்தில், வேலை நன்றாக முடிந்தது.. எனவே, இது சம்பந்தமாக, வேலை நன்றாக முடிந்தது.

சடவ்ஸ் கீவ் அரங்கம் மூடப்பட்ட பிறகு, இவர் எல்' விவ் உக்ரேனிய டிஸ்கஸ் தியேட்டருடன் இணைந்து நிகழ்த்தினார். அங்கு இவர் ஒலெக்சாண்டர் கோஷிட்சின் வழிகாட்டுதலின் கீழ் உக்ரேனிய தேசிய கோரஸில் சேர்ந்தார். இவர் 1922 இல் கோரசுடன் அமெரிக்காவிற்கு பயணம் செய்து 1924 வரை அவர்களுடன் சுற்றுப்பயணம் செய்தார்.[10]

1922 இல், ஒலெக்சாண்டர் கோஷிட்ஸின் வழிகாட்டுதலின் கீழ் உக்ரேனிய தேசிய கோரசில் இணைந்தார்.[11] அங்கு, மரியா ஒரு சிறந்த நடத்துனரின் வழிகாட்டுதலின் கீழ் உக்ரேனிய குடியரசுக் கோரல் சேப்பலுக்கான பாடகர் ஆனார். இரெபினெட்ஸ்கா 1922 இல் கோரசுடன் அமெரிக்காவிற்கு பயணம் செய்து 1924 வரை அவர்களுடன் சுற்றுப்பயணம் செய்தார்.[2] இவரது சகோதரர் மைகைலோ இரெபினெட்ஸ்கியும் கோரசில் இணைந்து நிகழ்த்தினார்.[12]

1923 முதல் 1928 வரை, நியூயார்க்கில் உள்ள பீப்பிள்ஸ் அவுசில் (1923-1928) இரெபினெட்ஸ்கா பாடினார். 1931 ஆம் ஆண்டில், வயலின் கலைஞர் ரோமன் பிரைடாட்கேவிச் மற்றும் பியானோ கலைஞரான அலிசா கோர்ச்சக் ஆகியோருடன் இணைந்து நியூயார்க் நகரில் "உக்ரேனிய திரையோ" குழுவை இரெபினெட்ஸ்கா உருவாக்கினார்.[2] இவர் 1934 வரை "உக்ரேனிய ட்ரையோ" குழுமத்தின் தனிப்பாடலாக இருந்தார்.

1930 களில், இரெபினெட்ஸ்கா நெஸ்டர் நோவோவிர்ஸ்கியை மணந்தார்.[2]

1941 ஆம் ஆண்டில், இவர் நியூயார்க் நகரத்தில் உள்ள வாஷிங்டன் இர்விங் ஈவினிங் உயர்நிலைப் பள்ளியில் வகுப்பில் மிக சிறந்த மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும். பட்டப்படிப்புக்கான தங்கப் பதக்கத்துடன் பட்டம் பெற்றார்.[13] உதவித்தொகையுடன், இவர் ஹண்டர் கல்லூரியில் சேர்ந்தார். அதில் இவர் 1949 இல் பட்டம் பெற்றார்.[2]

தனது இளமை பருவத்தில், மரியா இரெபினெட்ஸ்கா வட அமெரிக்காவின் மிக முக்கியமான உக்ரேனிய பாடகிகளில் ஒருவராக இருந்தார். ஏறக்குறைய 20 ஆண்டுகளாக, இரெபினெட்ஸ்கா நியூயார்க் நகரில் உக்ரேனிய தேசிய இல்லத்திலும், 1944 இல் இவர் இணைந்து நிறுவிய சுர்மா புக் அண்ட் மியூசிக் கம்பெனியின் ஸ்டுடியோவிலும் குரலிசையும் பியானோவும் கற்பித்தார்.[2]

மரியா இரெபினெட்ஸ்கா 1972 ஆகத்து 15 அன்று நியூயார்க்கில் இறந்தார்.[8] மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்ட கணவரைப் பார்க்க செல்லும் வழியில் வடகைத் தானுந்து மோதியதால் இறந்தார்.[14]

மேற்கோள்கள்

தொகு
  1. "До 140-річчя від дня народження Марії Гребінецької". Український тижневик Міст (in உக்ரைனியன்). 2013-10-10. Archived from the original on 2015-01-02. பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Maria Hrebinets'ka papers". Ukrainian History and Education Center (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
  3. "Musical Ukraine". Ukrainian Art History 19: 40. 1984. 
  4. "Мишуга Олександр Пилипович", Вікіпедія (in உக்ரைனியன்), 2022-12-20, பார்க்கப்பட்ட நாள் 2023-05-13
  5. "Гребінецька Марія Зиновіївна — Енциклопедія Сучасної України". esu.com.ua. பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
  6. Фанатик мистецтва // Головащенко М. Олександр Мишуга. Спогади, матеріали, листи. — К.: Музична Україна, 1971. — c. 203-204
  7. СЛОВНИК СПЇВАКЇВ УКРАЇНИ (PDF) (in உக்ரைனியன்).
  8. 8.0 8.1 "Троїцький народний будинок Київського товариства грамотності (тепер Київський національний академічний театр оперети), 1901-02 | Звід Історїї Памяток Києва". pamyatky.kiev.ua (in ரஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
  9. "Театр оперети | Путівник по культурній спадщині Києва". kyiv-heritage-guide.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
  10. "Maria Hrebinets'ka papers". Ukrainian History and Education Center (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-13.
  11. КЛИМКО, А. (1957). "СПОМИН ПРО МИХАЙЛА ГАИВОРОНСЬКОГО". КАЛЕНДАР СВОБОДИ НА 1957 (UKRAINIAN NATIONAL ASSOCIATION): 91. http://diasporiana.org.ua/wp-content/uploads/books/1257/file.pdf. 
  12. "Помер співак українець". http://archive.org/details/Svoboda-1943-148. 
  13. . 11 July 1941. 
  14. "Maria Hrebinets'ka papers". Ukrainian History and Education Center (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_இரெபினெட்ஸ்கா&oldid=4108167" இலிருந்து மீள்விக்கப்பட்டது