மரியா கப்னிஸ்ட்

சோவியத், உக்ரைனிய நடிகை

மரியா ரோஸ்டிஸ்லாவிவ்னா கப்னிஸ்ட் (Maria Rostyslavivna Kapnist, உக்ரைனியன்: Марі́я Ростисла́вівна Капні́ст), மரியெட்டா ரோஸ்டிஸ்லாவிவ்னா கப்னிஸ்ட்-சிர்கோ (9 (22) மார்ச் 1913 – 25 அக்டோபர் 1993, கீவ்) என்பவர் ஒரு உக்ரேனிய நடிகை ஆவார். இவர் உக்ரேனிய சோவியத் மாநில அரசிடம் மரியாதைக்குரிய கலைஞர் (1988) என்ற பட்டத்தைப் பெற்றவர் ஆவார்.[1] இவரது நடிப்பு வாழ்க்கையில் (1956-1993) இவர் நூற்றுக்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்துள்ளார்.[2]

மரியா கப்னிஸ்ட்
பிறப்புமரியெட்டா ரோஸ்டிஸ்லாவிவ்னா கப்னிஸ்ட்-சிர்கோ
(1913-03-22)மார்ச்சு 22, 1913
செயின்ட் பீட்டர்ஸ்பர்க், உருசிய பேரரசு
இறப்பு25 அக்டோபர் 1993(1993-10-25) (அகவை 80)
கீவ், உக்ரைன்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1956-1993

துவக்ககால வாழ்க்கையும், கல்வியும்

தொகு

மரியெட்டா கப்னிஸ்ட்-சிர்கோ 1913 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 (22) அன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பிறந்தார்.[3] இவரது தந்தை, கவுண்ட் ரோஸ்டிஸ்லாவ் கப்னிஸ்ட், சபோரிஜியன் இராணுவத்தின் வாசிலி கப்னிஸ்ட்டின் மைரோரோட் மற்றும் கியேவ் கர்னல் ஆகியோரின் நேரடி வழித்தோன்றல் ஆவார். மேலும் இவரது தாயார், அனஸ்தேசியா பேடாக் - சபோரிஜியன் ஒடமான் இவான் சிர்கோவின் கொள்ளுப் பேத்தி ஆவார்.[4]

கப்னிஸ்ட் தனது முதல் குரல் பயிற்சியை ஓபரா பாடகரான ஃபியோடர் சாலியாபின் பெற்றார். முதல் மேடை ஏற்றத்தின்போது அவரது நடிப்புத் திறமை அனைவரையும் ஈர்த்தவா்.[5]

கப்னிஸ்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 1917 வரை வாழ்ந்தார். அப்போது அவர்கள் புரட்சிகர புயல்களில் இருந்து தப்பிக்க கிரிமியாவின் சுடாக் நகருக்கு தப்பிச் செல்ல வேண்டியிருந்தது.[6] 1921 ஆம் ஆண்டில், கப்னிஸ்டின் தந்தை ரோஸ்டிஸ்லாவ், செக்காவின் தண்டனைப் பிரிவினரால் சுடப்பட்டார்.[7] விரைவில், சுடக்கில் உள்ள கப்னிஸ்டுகளின் வீடு அழிக்கப்பட்டது, எஞ்சியிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவாக வேண்டியிருந்தது.[8]

1927 ஆம் ஆண்டில், கப்னிஸ்ட் தனது அத்தையுடன் வாழ கியேவுக்குச் சென்று அங்குள்ள ஒரு தொழிலாளர் பள்ளியில் படித்து பட்டம் பெற்றார்.[9] பின்னர் கப்னிஸ்ட் லெனின்கிராட் சென்றார், அங்கு 1934 இல் அலெக்சாண்டர் புஷ்கின் பெயரிடப்பட்ட லெனின்கிராட் நாடக அரங்கான யூரி யூரிவின் தியேட்டர் ஸ்டுடியோவில் இணைந்தார்.[3]

1934 இல், சோவியத் அரசியல்வாதியான செர்ஜி கிரோவ் கொல்லப்பட்டார், கிரோவுடன் நட்பில் இருந்த கப்னிஸ்டுகள் மீண்டும் நம்பமுடியாதவர்களாக கருதப்பட்டனர்.[4] இதன் காரணமாக, கப்னிஸ்ட் நாடக நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் லெனின்கிராட்டில் வாழ தடை விதிக்கப்பட்டார். எனவே, இவர் கியேவிற்கும் பின்னர் படுமிக்கும் கணக்காளராக பணியாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார்.[10]

அடக்குமுறைகள்

தொகு

1937 ஆம் ஆண்டில், கப்னிஸ்ட் முதல் முறையாக கைது செய்யப்பட்டார், ஆனால் விரைவில் விடுவிக்கப்பட்டார்.[11] 1941 ஆகத்து 27 அன்று அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.[12] கப்னிஸ்ட் சோவியத் எதிர்ப்பு பிரச்சாரத்தை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டார்.[10] பிரிவு 58-10 பகுதி 1 ("சோவியத் அரசாங்கத்தை கவிழ்க்க அழைப்பு விடுக்கும் பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சி") படி இவருக்கு 8 ஆண்டுகள் தொழிலாளர் முகாம்களில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

[13] 1949 ஆகத்தில், கப்னிஸ்ட் ஸ்டெப்லாக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு கிராஸ்நோயார்ஸ்க் பிரதேசத்தில் உள்ள கசாச்சின் கிராமத்திற்கு அனுப்பப்பட்டார்.[14]

1950 ஆம் ஆண்டில், கசகஸ்தானில் உள்ள சிறை மருத்துவமனையில் ஸ்டெப்லாக்கில் தன் மகள் ராடிஸ்லாவாவைப் பெற்றெடுத்தார். பின்னர் இவர் நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரிய அனுப்பப்பட்டார்.[14] இவரது குழந்தையின் தந்தை ஜான் வோல்கோன்ஸ்கி, ஒரு சிறந்த போலந்து பொறியியலாளர் ஆவார். ராடிஸ்லாவா பிறந்த மூன்று ஆண்டுகள் கழித்து அவர் சுடப்பட்டார்.[15]

1951 ஆம் ஆண்டில், சோவியத் எதிர்ப்பு கிளர்ச்சி குற்றச்சாட்டில் கப்னிஸ்ட் மீண்டும் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.[14] இவரது இரண்டு வயது மகள் இவரிடமிருந்து பிரிக்கபட்டு கிராஸ்நோயார்ஸ்க் பிரதேசத்தில் உள்ள எசாலோவ்ஸ்கி அனாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.[16] கப்னிஸ்டின் நண்பர் மாஸ்கோ சென்று சோவியத் அரசியல் பிரமுகரான அனஸ்தாஸ் மிகோயன் என்பவரைச் சந்தித்து கப்னிஸ்டின் சட்டவிரோத சிறைவாசம் குறித்து அவரிடம் புகார் செய்தார்.[13] மிகோயனின் தலையீட்டின் மூலம், கப்னிஸ்ட் 1956 பெப்ரவரியில் தனது 10 ஆண்டு தண்டணைக் காலம் முடிவடைவதற்கு முன்பு விடுவிக்கப்பட்டார் (தண்டணைக் காலம் 1963 இல் முடிவடைய வேண்டி இருந்தது).[14]

திரைப்படத்துறையில் மறுவாழ்வும் தொழிலும்

தொகு

கப்னிஸ்ட் விடுவிக்கப்பட்ட பிறகு அதே ஆண்டு மாஸ்கோவிற்கும் பின்னர் கியேவிற்கும் சென்றார். அவர் 1930 களில் இருந்து தனது தோழியான அன்னா பில்னியாக் உடன் வசிக்கச் சென்று, உடல் பிடித்துவிடும் பெணாணாக பணியாற்றினார்.[13] அதே ஆண்டில் கப்னிஸ்ட் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார், 1956 ஆம் ஆண்டு மக்சிம் ரூஃப் மற்றும் ஒலெக்சாண்டர் முசில் இயக்கிய ஒன் நைட் திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் எழுத்தாளர் மற்றும் கல்வியாளருமான மைகோலா பஜனை சந்தித்தார். அவரது உதவியுடன் உக்ரைனின் சோவியத் எழுத்தாளர்களின் ஒன்றிய எழுத்தாளர்களின் மனைவி ஒருவரின் பராமரிப்பாளராக கப்னிஸ்ட்டை நியமிக்கபட்டார்.[11] கப்னிஸ்ட் 1958 இல் மறுவாழ்வு பெற்றார்.[10]

கப்னிஸ்ட் தன் மகள் ராடிஸ்லாவாவை அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை, ஏனெனில் இவருக்கு நரம்பு மண்டல கோளாறு இருப்பதாகக் கூறி சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. இவரது மகளை ஒரு நண்பரான வாலண்டினா பசாவ்லுக் என்பவர் தத்தெடுத்துக்கொண்டார்.[13]

உருசிய சோவியத் கூட்டாட்சி சோசலிச குடியரசின் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் கப்னிஸ்ட் வழக்கில் தண்டனை மற்றும் அடுத்தடுத்த அனைத்து முடிவுகளும் ரத்து செய்யப்பட்டு, குற்றத்திற்கான அடிப்படை இல்லாததால் இவருக்கு எதிரான வழக்கு நிறுத்தப்பட்டன.

1960 முதல் 1993 வரை, கப்னிஸ்ட் டோசென்கோ ஃபிலிம் ஸ்டுடியோவில் முழுநேர நடிகையாக பணியாற்றினார்.[10] இந்த நேரத்தில், இவர் நூற்றுக்கும் மேற்பட்ட பாத்திரங்களில் நடித்தார்.[2][17] குறிப்பாக வயதான பெண்கள், மந்திரவாதிகள், சூனியக்காரிகள், ஜிப்சிகள் போன்ற பாத்திரங்களுக்காக கப்னிஸ்ட் பிரபலமானவராக இருந்தார்.[18]

1988 ஆம் ஆண்டில், கப்னிஸ்டுக்கு உக்ரேனிய சோவியத் மாநில அரசின் மரியாதைக்குரிய கலைஞர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.[1]

மரணம்

தொகு
 
மரியா கப்னிஸ்டுக்கு வெளியிடப்பட்ட உக்ரைனின் அஞ்சல் தலை

கப்னிஸ்ட் நிலத்தடி சுரங்கங்களில் வேலை செய்ய வேண்டிய தொழிலாளர் முகாம்களில் கழித்த காலத்தில், இவர் தனிமையச்சம் என்ற நோயால் பீடிக்கபட்டார். இந்த அச்ச நோயால் சாலைகளைக் கடக்கப் பயன்படுத்தப்படும் நிலத்தடி சுரங்க நடை பாதைகளை பயன்படுத்த முடியாதவராக இருந்தார்.[19] 1993 அக்டோபரில் இ, ஒலெக்சாண்டர் டோவ்ஷென்கோ ஃபிலிம் ஸ்டுடியோவுக்கு அருகில் கியேவில் பெரெமோஹி அவென்யூவைக் கடக்கும்போது இவர் கார் விபத்தில் சிக்கினார்.[20] 1993 அக்டோபர் 25 அன்று கியேவில் உள்ள ஒலெக்சாண்டர் மருத்துவமனையில் இறந்தார்.[5] இவரது உடல் பொல்டாவா மாவட்டத்தின் மைர்ஹோரோட், வெலிகா ஒபுகிவ்கா கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.[15]

நினைவு கூர்தல்

தொகு

2009 ஆம் ஆண்டில், உக்ரேனிய இயக்குனர் செர்ஹி டாரிச்சுக் தனது ஆவணப்படமான "புரௌட் டியர்" (2009) படத்தை மரியா கப்னிஸ்டுக்கு அர்ப்பணித்தார்.[21]

1914-1993. இவரது நூற்றாண்டு நினைவாக , 2014 இல் உக்ரேனிய அரசு அஞ்சல் சேவையான உக்ரபோஷ்டா அஞ்சல் நிறுவனம் #1370 "மரியா கப்னிஸ்ட்" என்ற அஞ்சல்தலையை வெளியிட்டது.[22]

2018 இல், கீவ் நகர சபை ஜெலியாபோவ் தெருவுக்கு மரியா கப்னிஸ்ட் தெரு என்று பெயர் இட்டது.[23]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Скалій, Раїса (26 February 2007). "Мозаїка спогадів про Марію Капніст". Кіно-Театр 5: 25–28. https://elib.nlu.org.ua/view.html?&id=4255. 
  2. 2.0 2.1 САМОЛЕВСКАЯ, Ольга (23 December 2014). "Главная роль Марии Капнист". Day. பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
  3. 3.0 3.1 Кудрицький, Анатолій; Лабінський, Микола (1997). Мистецтво України (біографічний довідник) (in உக்ரைனியன்). Українська енциклопедія ім. М. П. Бажана. p. 286.
  4. 4.0 4.1 "Актерский талант заметил Шаляпин, а Берия сослал в лагеря". КП в Украине | КП в Україні | KP in Ukraine (in ரஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-09.
  5. 5.0 5.1 "Мария Капнист: «Не смейтесь над старостью человека, чьей молодости вы не видели»…". Леди Лайк (in ரஷியன்). 2018-04-25. Archived from the original on 2018-10-18. பார்க்கப்பட்ட நாள் 2021-12-09.
  6. Игорь, Азаров. "Мария Капнист – графиня из ГУЛАГа - Литературная газета". www.lgz.ru. பார்க்கப்பட்ட நாள் 2021-12-09.
  7. Леонтович, Олена (2-15 April 2003). "Та що несла людям жайворонків". Слово Просвіти 15 (183): 9. http://slovoprosvity.org/pdf/2003/Slovo-Cyan15.pdf. 
  8. "Мария Капнист – Графиня из ГУЛага". Бессмертный барак (in ரஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-09.
  9. Ельникова, Л. Капнист М. Р. В огне непоколебимы. Кино: политика и люди (30-е годы) : К 100-летию мирового кино. Archived from the original on 2021-12-09. பார்க்கப்பட்ட நாள் 2024-03-13.
  10. 10.0 10.1 10.2 10.3 "Капніст Марія Ростиславівна — Енциклопедія Сучасної України". esu.com.ua. பார்க்கப்பட்ட நாள் 2021-12-09.
  11. 11.0 11.1 "Посетив францию после 20 лет сталинских лагерей, графиня капнист жаловалась: «за границей жить не могу! Так и не привыкла выключать за собой свет! »". crime.fakty.ua (in உக்ரைனியன்). 21 March 2003. பார்க்கப்பட்ட நாள் 2021-12-09.
  12. Леонтович, Олена (2009). "Моя тітонька Міра...". Кіно-театр 3 (83): 15–17. https://elib.nlu.org.ua/view.html?&id=3086. 
  13. 13.0 13.1 13.2 13.3 "Рада, дочь знаменитой актрисы графини марии капнист: «когда мама отказалась делать аборт, ее начали пытать: опускали в ледяную ванну и избивали ногами»". culture.fakty.ua (in உக்ரைனியன்). 21 March 2005. பார்க்கப்பட்ட நாள் 2021-12-09.
  14. 14.0 14.1 14.2 14.3 ""В огні не спалима..." Інформаційно-бібліографічний список". calameo.com. 2014. பார்க்கப்பட்ட நாள் 2021-12-09.
  15. 15.0 15.1 Татьяна, КОСТЕНКО (22 March 2007). ""С любовью, твоя баба Яга"". КП в Украине (in ரஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-09.
  16. Осока, Сергій (2017-12-13). "Марія Капніст, графиня, відьма й великомучениця". Повага (in உக்ரைனியன்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-09.
  17. "Мария Капнист". Кино-Театр.Ру. பார்க்கப்பட்ட நாள் 2021-12-09.
  18. "Мемориальная доска актрисе Марии Капнист". vkieve.net (in ரஷியன்). 2017-12-09. பார்க்கப்பட்ட நாள் 2021-12-09.
  19. Бойко, Юлия (1 October 2020). "Мария Капнист: звезда, угасшая в Киеве". my-kiev.com. பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
  20. "Великая актриса Мария Капнист в 40 лет выглядела на 70". Інтернет-видання «Полтавщина» (in உக்ரைனியன்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-09.
  21. "Марія Капніст". dzygamdb.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-09.
  22. "Марка «Марія Капніст. 1914-1993. 100 років від дня народження»/2014". pm.ukrposhta.ua. Archived from the original on 2021-12-09. பார்க்கப்பட்ட நாள் 2021-12-09.
  23. "Про перейменування вулиці у Шевченківському районі міста Києва". kmr.ligazakon.ua. Archived from the original on 2019-02-20. பார்க்கப்பட்ட நாள் 2021-12-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_கப்னிஸ்ட்&oldid=4108243" இலிருந்து மீள்விக்கப்பட்டது