மரியா சுத்ரோய்னிக் சுக்கோல்

மரியா சுத்ரோய்னிக் சுக்கோல் (Marija Strojnik Scholl (பிறப்பு:13ஜூலை 1950, இலியுபிலியானா) ஒரு சுலோவேனிய வானியற்பியலாளர் ஆவார். இவர் இப்போது மெக்சிகோவில் உள்ள குவானாயுவாத்தோ சார்ந்த இலியோனில் அமைந்த ஒளியியல் ஆராய்ச்சி மையத்தின் தகவுறு பேராசிரியராக உள்ளார். இவர் மின்னூட்டப் பிணிப்புத் கருவித் தொழில்நுட்பத்தால் ஒளியியல் முறையில் கலமோட்டும் தன்னியக்க அமைப்பை வடிவமைத்து நடைமுறைப்படுத்தி பெயர் பெற்றார். இந்த அமைப்பு நடப்பில் உள்ள அனைத்து வானூர்திகளிலும் விண்வெளிக் கலங்களிலும் பரவலாக அமைந்துள்ளது.[1][2]

மரியா சுத்ரோய்னிக் சுக்கோல்
Marija Strojnik Scholl
பிறப்புசூன் 13, 1950 (1950-06-13) (அகவை 73)
தேசியம்சுலோவெனியர்
துறைவானியற்பியல், அகச்சிவப்புக்கதிர் தொழில்நுட்பம், அகச்சிவப்பு விண்வெளித் தோற்றத் தொலைவில் உணர்தல்
பணியிடங்கள்இராக்வெல் பன்னாட்டுக் குழுமம்
அனிவெல் குழும்ம்
தாரைச் செலுத்த ஆய்வகம்
ஒளியியல் ஆய்வு மையம்(Centro de Investigaciones en Optica)
கல்வி கற்ற இடங்கள்அரிசோனா மாநிலப் பல்கலைக்கழகம்
அரிசோனா பல்கலைக்கழகம்
அறியப்படுவதுதன்னியக்க ஒளியியல் கலமோட்ட அமைப்பு உருவாக்கம்

இளமையும் கல்வியும் தொகு

தகுதி சான்ற பொறியாளரான அலேசு சுத்ரோய்னிக் குடும்பத்தின் ஒரே வாரிசாக இவர் பிறந்துள்ளார். தன் தந்தையோடு வேலைக்குச் செல்லும்போதே இளமையிலேயே ஒளியியலில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டுள்ளார். இவர் தன் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்ததும் இல்யூப்லியானா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் வகுப்பில் சேர்ந்துள்ளார்; என்றாலும் இவரது பெற்றோர் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். எனவே இவரும் அமெரிக்காவில் அரிசோனாவில் உள்ள தெம்பே நகருக்கு நகர்ந்தார். அங்கு இவரது தந்தையார் அரிசோனா மாநிலப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகி உள்ளார்.அங்கே வகுப்பில் ஒரே பெண் மாணவராக இரண்டே ஆண்டுகளில் தன் இளவல் பட்டத்தைப் படித்து முடித்துள்ளார். இவர் அரிசோனா மாநிலப் பல்கலைக்கழகத்தில் ஒளியியலில் தன் பட்டமேற் படிப்பைத் தொடர்ந்தார். இவர் 1979 இல் முனைவர் பட்டத்தைப் பெற்றார். இவரே ஒளியியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணியானார்.[2][3]இவர் இரு மூதறிவியல் பட்டங்களைப் பெற்றுள்ளார். ஒன்று இலாசு ஏஞ்சலீசில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் வழங்கிய பொறியியல் செயல்திட்டப் பயில்வுக்கும் மற்றொன்று அரிசோனா மாநிலப் பல்கலைக்கழகம் வழங்கிய இயற்பியல் பயில்வுக்குமானதாகும்.[4]

வாழ்க்கைப்பணி தொகு

அகச்சிவப்புக்கதிர் இயற்பியல் புலமை பெற்றதும், இராக்வெல் பன்னாட்டுத் தொழிலிணையத்தின் ஒளியியல் துறை மேலாளராகவும், அனிவெல் குழுமத்திலும் தாரைச் செலுத்த ஆய்வகத்திலும் முதுநிலைப் பொறயாளரும் ஆனார். இவர் தாரைச் செலுத்த ஆய்வகத்தில் விண்மீன் அட்டவணைகளையும் மின்னூட்டப் பிணிப்பு ஒளிப்படக் கருவியையும் பயன்படுத்திப் புதிய தன்னியக்க ஒளியியல் கலமோட்டல் முறையை வடிவமைத்து உருவாக்கி நடைமுறையில் செயல்பட வைத்தார்.இந்தத் தன்னியக்கக் கலமோட்டல் முறை அனைத்து வணிகவியல் வானூர்திகளிலும் புவியக இருப்பறியும் வலையுள்ளா விண்கலங்களிலும் பிறவற்றிலும் பயன்மிகுந்த்தாக விளங்குகிறது. இந்தத் தன்னியக்கக் கலமோட்டல் முறை தான் 2005 இல் காரிக்(சனிக்)கோளுக்கான காசினி-ஐகன்சு ஆய்வுக்கலத்திலும் பயன்படுத்தப்பட்டது.[2][3]

இவர் தன் தகுதியால் மெக்சிகோவில் உள்ள ஒளியியல் ஆராய்ச்சி மையத்தின்(Centro de Investigaciones en Optica) பேராசிரியர் ஆனார். இங்கு இவர் குறுக்கீட்டளவியல் முறையைப் பயன்படுத்திப் புறவெளிக்கோள்களை நேரடியாகக் கண்டறியும் வழிமுறையை வகுத்தார்.[1] இவர் ஒலியியல் கழகத்திலும் SPIE அமைப்பிலும் ஆய்வுறுப்பினராக உள்ளார், மேலும் இருமுறை அகச்சிவப்பு பயன்பாட்டு ஒளியியல் இதழுக்கும் பதிப்பாசிரியராகவும் விளங்கினார்.[5]இவர் மேலும் அகச்சிவப்பு இயற்பியல், தொழில்நுட்ப இதழுக்கும் அறிவியல் உலகம் இதழுக்கும் கூட பதிப்பாசிரியர் ஆனார்[6]


விருதுகள் தொகு

இவர் 1996 இல் பன்னாட்டு ஒளியியல், ஒளியனியல் கழகத்தின் ஜார்ஜ் கோடார்டு விருதைப் பெற்றார்.[2][5] இவர் 2001 இல் மெக்சிக அறிவியல் கல்விக்கழகத்தில் உறுப்பினர் ஆனார். இவருக்கு 2018 இல் மெக்சிகத் தேசிய ஆராய்ச்சியாளர்கள் பதிவகத்தின் தகைமைத் தகுதி வழங்கப்பட்டது.[7]இவர் சுலோவேனியத் தொழில்நுட்ப அருங்காட்சியகம் ஒருங்கமைக்கும் "வரம்பற்ற அறிவு" எனும் தொடர் காட்சிவெளியில் பங்கேற்கிறார்.[8]

சொந்த வாழ்க்கை தொகு

இவருக்கு மூன்று பெண்குழவிகள் பிறந்தனர். தன் கணவர் இயக்க முடக்க நரம்பு நோயால் இறந்த பிறகு தனியாகவே மூன்று குழந்தைகளையும் இவர் வளர்த்துள்ளார். இவர்களில் இருவர் தாமே அறிவியலாளர்கள் ஆகியுள்ளனர். இவரூக்கும் 2008 இல் புற்று நோய் தாக்கியுள்ளது. இவர் மருத்துவத்தால் இந்நோயை பலமுறை தாக்குபிடித்து வென்றுள்ளார்.[2][3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Gass, Jeanette. "Marija Strojnik". The Optical Society. பார்க்கப்பட்ட நாள் 2018-10-15.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Marija Strojnik, the astrophysicist who sees beyond the solar system". STAznanost (Slovenian Press Agency). 2017-11-23. http://znanost.sta.si/2443397/marija-strojnik-the-astrophysicist-who-sees-beyond-the-solar-system. பார்த்த நாள்: 2019-04-24. 
  3. 3.0 3.1 3.2 Bandur, Simona (2018-05-23). "Znanstvenica, ki sledi svoji otroški želji po odkrivanju prostora" (in sl). Delo. https://www.delo.si/magazin/zanimivosti/znanstvenica-ki-sledi-svoji-otroski-zelji-po-odkrivanju-prostora-53268.html. பார்த்த நாள்: 2019-04-24. 
  4. "Marija Strojnik". www.cio.mx. பார்க்கப்பட்ட நாள் 2020-06-13.
  5. 5.0 5.1 "Marija Strojnik-Scholl". The International Society for Optics and Photonics. Archived from the original on 2018-10-15. பார்க்கப்பட்ட நாள் 2019-04-24.
  6. "Marija Strojnik | Longdom Publishing SL". www.longdom.org. பார்க்கப்பட்ட நாள் 2020-05-25.
  7. Jiménez, Arturo Sánchez (2018-12-06). "Reconocen a 20 académicos como investigadores eméritos - Sociedad y Justicia - La Jornada". www.jornada.com.mx (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-13.
  8. Žibret, Andreja (2018-03-01). "Štirinajst slovenskih znanstvenikov na ogled". www.delo.si (in ஸ்லோவேனியன்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-13.