மரியா ஜோசு ஆல்வெசு

மரியா ஜோசு ஆல்வெசு (Maria José Alves) இவர் பிரேசிலைச் சேர்ந்த ஒரு இணை ஒலிம்பிக்கில் பார்வைக் குறைபாடு பிரிவில் விளையாடிய தடகள வீரராவார். முக்கியமாக டி 12 வகை விரைவோட்டப் போட்டிகளில் போட்டியிடுகிறார்.

பதக்க சாதனைகள்
தடகளம்
நாடு  பிரேசில்
இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1996 அட்லான்டா 100 மீட்டர் டி11
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1996 அட்லான்டா 200 மீட்டர் டி11
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2004 ஏதென்ஸ் 100 மீட்டர் டி12
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2004 ஏதென்ஸ் 200 மீட்டர் டி12

இவர் நான்கு இணை ஒலிம்பிக்கில் போட்டியிட்டு, நான்கு வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளார். இவரது முதல் ஓட்டம் 1996 ஆம் ஆண்டு அட்லான்டா விளையாட்டுப் போட்டிகளில் இருந்தன. அதே போட்டியில் இவர் 400 மீட்டர் ஓட்டத்திலும், நீளம் தாண்டுதலிலும் போட்டியிட்டார். அதில் இவர் ஆறாவது இடத்தைப் பெற்றார். இதில் இவர் 100 மீ, 200 மீ, 400 மீ நீளம் தாண்டுதலில் பங்கேற்று வெண்கலம் வென்றார். 2000இல் சிட்னியில் நடைபெற்ற கோடைகால இணை ஒலிம்பிக்கில் இவர் 100 மீட்டர், 200 மீட்டர் ஆகியவற்றில் கல்ந்து கொண்டார். ஆனால் எந்த பதக்கமும் கிடைக்கவில்லை. 2004இல் ஏதென்ஸிலும், பெய்ஜிங்கில் நடந்த கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலும் இவர் 100 மீ, 200 மீ, 400 மீ. போட்டிகளில் போட்டியிட்டார். 2004 ஆட்டங்களில் தான் 100 மீட்டரிலும், 200 மீட்டரிலும் தனது வெண்கலத்தை பெற்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_ஜோசு_ஆல்வெசு&oldid=3842361" இலிருந்து மீள்விக்கப்பட்டது