மரியா ரிடுல்ப்பின் கொலை



மரியா எலிசபெத் ரிடுல்ப் (Murder of Maria Ridulph, மார்ச் 12, 1950 - திசம்பர் 1957) என்னும் 7 வயதான அமெரிக்க சிறுமி[1], திசம்பர் 3, 1957 அன்று, இலினாய்சின் சிகாமோர் நகரில், அவரது வீட்டருகே உள்ள தெருமுனையிலிருந்து காணாமல் போனார். இறுதியாக, மரியாவை இருபது வயதான அந்நிய நபருடன் கண்டதாக, அவளுடைய பக்கத்து வீட்டுத் தோழி கூறியுள்ளார். மேலும், அந்த அந்நியன், அவனது பெயரை ஜானி என்று சொன்னதாகவும் கூறியுள்ளார். 5 மாதத்திற்குப் பின், இலினாய்சின் உட்பைன் (மரியாவின் வீட்டிலிருந்து 100 மைல் தொலைவு) பகுதியின் காட்டில் மரியாவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.[1][2]

மரியா ரிடுல்ப்
பிறப்பு மார்ச் 12,1950
சிகாமோர், இலினாய்சு
தேசியம் அமெரிக்கர்

இது சிகாகோ பகுதியில் நன்கு அறியப்பட்ட வழக்கு ஆகும். இந்த கொலையில் ஈடுபட்டதாக கூறப்பட்ட ஜான் டெசிஸர் என்ற பழைய பெயரைக் கொண்டும், ஜான் மெக்கல்லோ என்ற புதிய பெயரைக் கொண்ட நபர் ரிடுல்ஃப் குடும்பத்தின் அண்டை வீட்டுக்காரர் ஆவார். இவர் இந்த கொலைக் குற்றத்துக்காக 2012 செப்டம்பரில் தண்டிக்கப்பட்டார்.[1][3][4] இருப்பினும், ஜான் மெக்கல்லோ தண்டனைபெற்ற பிறகு கிடைத்த சில சான்றுகளின்படி ஜான் மெக்கல்லோதான் இந்த குற்றத்தில் ஈடுபட்டார் என்பதை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதாக 2016 மார்ச்சில், டெல்கால் கவுண்டி ஸ்டேட்ஸ் அட்டர்னி அறிவித்தார். [5][6] மெக்கல்லோ 2016 ஏப்ரல் 15 அன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் 2016 ஏப்ரல் 22 அன்று தள்ளுபடி செய்யப்பட்டன. [7][8] 2017 ஏப்ரல் 12 இல் டி கல்ப் கவுண்டி சர்கியூட் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட மெக்கல்லோ அப்பாவி என அறிவிக்கப்பட்டார். [9][10]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Goode, Erica (December 10, 2012). "55 Years After Girl's Death, Her Killer Gets a Life Term". New York Times. https://www.nytimes.com/2012/12/11/us/maria-ridulphs-killer-gets-life-55-years-after-her-death.html?partner=rss&emc=rss&smid=tw-nytimes. 
  2. "Cause of Death Uncertain: Find Maria's Body on Wooded Hill". True Republican (Sycamore, Illinois): p. 1. April 29, 1958. http://idnc.library.illinois.edu/cgi-bin/illinois?a=d&d=STR19580429.2.6#. 
  3. Greg Fisher, Judy Rybak, and Peter Henderson (producers) (May 24, 2014). 48 Hours Presents: Cold as Ice (documentary) (in English). CBS News. பார்க்கப்பட்ட நாள் April 19, 2016. Oldest cold case to go to trial in U.S. tests memories, forces family to expose deep, dark secrets in search of justice for murdered girl{{cite AV media}}: CS1 maint: unrecognized language (link)
  4. People v. McCullough, No. December 2, 1364 (Ill. App. Ct. February 11, 2015).
  5. O'Neill, Ann (April 22, 2016). "Charges Dropped in 1957 Cold Case Murder". CNN. http://www.cnn.com/2016/04/22/us/jack-mccullough-maria-ridulph-1957-cold-case/. 
  6. Hinkel, Dan (March 25, 2016). "Prosecutor Says Conviction in Cold Case Slaying of Girl, 7, Should Be Overturned". http://www.chicagotribune.com/news/local/breaking/ct-mcculough-conviction-overturn-20160325-story.html. பார்த்த நாள்: March 25, 2016. 
  7. O'Neill, Ann (April 15, 2016). "Judge Overturns 1957 Cold Case Murder Conviction; Jack McCullough Goes Free". http://www.cnn.com/2016/04/15/us/1957-cold-case-jack-mccullough-maria-ridulph/index.html. பார்த்த நாள்: April 15, 2016. 
  8. Ward, Clifford (April 22, 2016). "Charges Dismissed Against Jack McCullough in '57 slaying of Sycamore Girl". http://www.chicagotribune.com/news/local/breaking/ct-jack-mccullough-1957-sycamore-murder-hearing-20160422-story.html. பார்த்த நாள்: April 22, 2016. 
  9. 2017 Circuit Court ruling
  10. CNN: Man wrongfully convicted in 1957 cold case murder declared innocent
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_ரிடுல்ப்பின்_கொலை&oldid=3777728" இலிருந்து மீள்விக்கப்பட்டது