மரிய குவாதலூபே கார்சிய சவாலா
மரிய குவாதலூபே கார்சிய சவாலா (27 ஏப்ரல் 1878 - 24 ஜூன் 1963) என்பவர் புனித மார்கரெட் மரி அலக்கோக் மற்றும் ஏழைகளின் கைத்தாதயர் என்னும் துறவற சபையின் இணை நிறுவனரும், அச்சபையின் முதல் தலைவியாக இருந்தவரும் ஆவார். திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இவருக்கு 25 ஏப்ரல் 2004 அன்று அருளாளர் பட்டம் அளித்தார். இவரின் புனிதர் பட்டமளிப்பு 12 மே 2013 அன்று நிகழவிருக்கின்றது.[1]
மரிய குவாதலூபே கார்சிய சவாலா | |
---|---|
கன்னியர், துறவற சபை நிறுவனர் | |
பிறப்பு | சபோப்பான், சலிசுக்கோ, மெக்சிகோ | ஏப்ரல் 27, 1878
இறப்பு | சூன் 24, 1963 குவாதலஜாரா, சலிசுக்கோ, மெக்சிகோ | (அகவை 85)
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை |
அருளாளர் பட்டம் | 25 ஏப்ரல் 2004, புனித பேதுரு சதுக்கம், வத்திக்கான் by இரண்டாம் யோவான் பவுல் |
புனிதர் பட்டம் | 12 மே 2013, புனித பேதுரு சதுக்கம், வத்திக்கான் நகர் |
திருவிழா | ஜூன் 24 |
வரலாறு
தொகுதுவக்க கால வாழ்க்கை
தொகுஇவர் சபோப்பான், ஜாலிஸ்கோ, மெக்ஸிக்கோவில் 27 ஏப்ரல் 1878 அன்று பிறந்தவர். இவரின் பெற்றோர் ஃபொர்தினோ கார்சிய மற்றும் ரெஃபுஜியோ சவாலா தெ கார்சிய ஆவர். இவருக்கு சபோப்பான் அன்னையிடம் மிகுந்த பக்தி உண்டு.[2]. இவருக்கு கஸ்டாவொ அரேயோலா என்பவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தாலும் தனது 23ஆம் அகவையில் அதனை முறித்து துறவு வாழ்கையில் வறுமை மற்றும் நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு உதவி புரிய முடிவு செய்தார்.
புதிய துறவற சபை
தொகுதனது ஆன்ம வழிகாட்டியான அருட்தந்தை சிப்ரியானோ இனிகுஇஸோடு இணைந்து 13 அக்டோபர் 1901 அன்று புனித மார்கரெட் மரி அலக்கோக் மற்றும் ஏழைகளின் கைத்தாதயர் என்னும் துறவற சபையினை நிறுவினார். அங்கே இவர் செவிளியராகப் பணிபுரிந்தார். இவர் சிலநாட்களிலேயே சபையின் தலைவியாக தெரிவுசெய்யப்பட்டார்.
தனது மருத்துவமனையில் மிகவும் பணம் தேவை ஏற்படும் போது, தெருவில் பிச்சை எடுக்க தனது ஆன்ம வழிகாட்டியிடம் அனுமதி பெற்றார்.[3] மருத்துவமனை மற்றும் அதன் நோயாளிகளின் தேவைகளை நிறைவேறும் வரை இவரும் இவரோடு மற்ற சபை சகோதரிகளும் பிச்சை எடுத்தனர். மேலும் குருக்களுக்கு மறைக்கல்வியில் உதவ அருகிலுள்ள பங்கு தளங்களில் பணி புரிந்தனர்.
மெக்சிகன் புரட்சி
தொகுமெக்சிகன் புரட்சி 1911 இல் தொவங்கியது. அதன் விளைவுகள் 1936 வரை நீடித்தன. கத்தோலிக்க திருச்சபையினர் இக்காலத்தில் பெரிதும் துன்புறுத்தப்பட்டனர். மரியா தன் உயிரையும் பொருட்படுத்தாமல் குவாதலஜாரா மறைவாட்டப் பேராயரையும் குருக்களையும் தனது மருத்துவமனையில் மறைத்து வைத்துப்பாதுகாத்தார்.
இறப்பு
தொகுமரியா தனது வாழ்வின் இறுதி இரண்டு ஆண்டுகளில், நோயினால் மிகுந்த துன்பம் அனுபவித்தார். இவர் தனது 85ஆம் வயதில் குவாதலஜாரா , ஜாலிஸ்கோ, மெக்ஸிக்கோவின் ஜூன் 1963 24 அன்று இறந்தார். அவரது வாழ்நாளில், மெக்ஸிக்கோவின் இவரின் சபை இல்லங்கள் 11 இடங்களில் நிறுவப்பட்டது. இன்று மெக்ஸிக்கோ, பெரு, ஐஸ்லாந்து, கிரீஸ், இத்தாலி முதலிய ஐந்து நாடுகளில் 22 இல்லங்கள் உள்ளன.
புனிதர் பட்டம்
தொகுஇவர் வணக்கத்திற்குரியவர் என 1 ஜூலை 2000 அன்று இரண்டாம் யோவான் பவுல் அறிவித்தார். இவருக்கு அருளாளர் பட்டம் இரண்டாம் யோவான் பவுலினால் 25 ஏப்ரல் 2004 அன்று அளிக்கப்பட்டது. இவரின் புனிதர் பட்டமளிப்பு 12 மே 2013 அன்று நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Consistory for several causes of canonization". Archived from the original on 2014-02-22. பார்க்கப்பட்ட நாள் 2013-02-19.
- ↑ "Mexico to Have a New Saint - "Mother Lupita" García Zavala". Archived from the original on 2013-12-16. பார்க்கப்பட்ட நாள் 2013-02-19.
- ↑ María Guadalupe García Zavala (1878-1963)
- ↑ “Saint Anastasia Guadalupe García Zavala“. Saints.SQPN.com. 12 பிப்ரவரி 2013. Web. 18 பிப்ரவரி 2013