மருதூர் ஏ. மஜீத்

மருதூர் ஏ. மஜீத் (ஏப்ரல் 1, 1940 - திசம்பர் 26, 2020) இலங்கைத் தமிழ் எழுத்தாளரும், கவிஞரும், இலக்கிய ஆர்வலருமாவார். 'மணிப்புலவர்' என அழைக்கப்பட்டவர். இலக்கியம், சிறுகதைகள், மருத்துவம், வரலாறு எனப் பல துறைகளிலும் நூல்களை எழுதியுள்ளார். கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

ஏ. மஜீத் கிழக்கிலங்கையில் சாய்ந்தமருதில் ஐ. அலியார், உதுமனாச்சி ஆகியோருக்கு 1940 ஏப்ரல் 1 இல் பிறந்தார். சாய்ந்தமருது மெதடித்த மிசன் கலவன் பாடசாலை, கல்முனை சாகிரா கலூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார். நாட்டின் பல பகுதிகளிலும் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், வட்டாரக் கல்வி அதிகாரியாகவும், கல்முனை கல்வி வலயப் பிரதிப் பணிப்பாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார். பின்னர் வட-கிழக்கு மாகாண முசுலிம் கலாச்சாரப் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.[1]

இலக்கியப் பங்களிப்பு

தொகு

சிறந்த மேடைப் பேச்சாளரான இவர், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார். இவரது 18 படைப்புகள் நூல்களாக வெளிவந்துள்ளன.[1] வானொலி, தொலைக்காட்சி சேவைகளிலும் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்.[1]

எழுதிய நூல்கள்

தொகு
  • தென்கிழக்கு முஸ்லிம் தேசத்தாரின் நாட்டாரியல் (2007)
  • ராமர் இந்தியாவில் பிறக்கவில்லை (2017)
  • தென்கிழக்கு முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு
  • நீரிழிவு வியாதியும் அதுபற்றிய சில அனுபவக் குறிப்புக்ளும்
  • பன்னீர் வாசம் பரவுகிறது
  • மத்திய கிழக்கில் இருந்து மட்டக்களப்பு வரை
  • மறக்க முடியாத என் இலக்கிய நினைவுகள்
  • மூடமறுக்கும் விழிகளும் துடிக்கும் இதயமும்

விருதுகள்

தொகு
  • கலாபூசணம் (இலங்கை அரசு)

உசாத்துணை

தொகு
தளத்தில்
மருதூர் ஏ. மஜீத் எழுதிய
நூல்கள் உள்ளன.
  1. 1.0 1.1 1.2 1.3 "கிழக்கின் இலக்கிய முதுசம் மருதூர் ஏ. மஜீத் காலமானார்". வீரகேசரி. 28 ஆகத்து 2020. p. 2. 
  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருதூர்_ஏ._மஜீத்&oldid=3415224" இலிருந்து மீள்விக்கப்பட்டது