மருத்துவக் கழிவுகள்

மருத்துவக் கழிவுகள் என்பது மருத்துவமனையில் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்குப் பிறகு, வெளியேற்றப்படும் கழிவுப் பொருள்கள் ஆகும். அதாவது பயன்படுத்தப்பட்ட சிரிஞ்சுகள், ஊசிகள், கத்தி, ரத்தக்குழாய்கள், செயற்கை சுவாசக் குழாய்கள், ரத்தம் மற்றும் சீழ் துடைக்கப்பட்ட பஞ்சுகள், பேண்டேஜ் துணிகள், கையுறைகள் போன்றவை. அத்துடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் அகற்றப்படும் விரல்கள் அல்லது கை, கால் போன்ற உறுப்புகளும் நுண்ணுயிர்க் கிருமிகள் கலந்த கழிவுகளும் காலாவதியாகும் மருந்துப் பொருள்களும்கழிவுகள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. "ட்ரீட்மெண்ட் பிளாண்ட்'டுகளில் "இன்சினரேட்டர்', "மைக்ரோவேவ்ஸ்' போன்ற எரிப்பான்கள் மூலம் உயர் வெப்பநிலையில் எரித்தல் போன்ற முறைகளைக் கையாண்டு மருத்துவக்கழிவுகள் அழிக்கப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருத்துவக்_கழிவுகள்&oldid=2021074" இலிருந்து மீள்விக்கப்பட்டது