மருந்தியல் கல்லூரி சேர்க்கைத் தேர்வு

மருந்தியல் கல்லூரி சேர்க்கைத் தேர்வு (Pharmacy College Admission Test-PCAT) என்பது சனவரி, சூலை மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில், பியர்சன் கல்வி நிறுவனத்தால் வருங்கால மருந்தியல் மாணவர்களுக்கு நடத்தப்படும் மின்னணு மதிப்பீடு சீர்தரப்படுத்தப்பட்ட தேர்வு ஆகும். இது அமெரிக்க மருந்தாளுநர் கல்லூரிகள் கழகத்திற்காக நடத்தப்படுகிறது.[1]

மருந்தியல் கல்லூரி சேர்க்கைத் தேர்வு
சுருக்கம்PCAT
வகைகணினிவழி சீர்தரப்படுத்தப்பட்ட தேர்வு
நோக்கம்மருந்தியல் கல்லூரியில் சேர்வதற்காக (குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் கனடாவில்)
ஆரம்பிக்கப்பட்ட வருடம்1974 (1974)
காலம்3 மணி, 25 நிமிடங்கள் + ஓய்வு இடைவெளி
தர அளவு200–600
மொழி(கள்)ஆங்கிலம்
கட்டணம்US$210.00
தரம் பாவிக்கப்படுவதுஅமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் கனடா நாட்டு மருந்தியல் கல்லூரிகள்
வலைத்தளம்pcatweb.info

இத்தேர்வு ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மூன்றரை மணி நேரத்தில் செய்யக்கூடியது. எழுதுதல், உயிரியல், வேதியியல், திறனாய்வு படித்தல் மற்றும் அளவு பகுப்பாய்வு ஆகியவைகளை உள்ளடக்கியது.[2] இத்தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் கிடையாது. தேர்வு சமயத்தில் கணிப்பான் பயன்படுத்த அனுமதி இல்லை மேலும் தவறான பதில்களுக்கு தண்டனையும் கிடையாது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Information - PCAT - Pharmacy College Admission Test". PCAT®. Pearson Education, Inc. பார்க்கப்பட்ட நாள் 4 May 2016.
  2. "About the Test" (PDF). PCAT Web. பார்க்கப்பட்ட நாள் 4 May 2016.

வெளியிணைப்புகள்

தொகு