மருந்தியல் மரபியல்

மருந்தியல் மரபியல் (pharmacogenetics) என்பது பலவகைப்பட்ட மருந்துகள் பலதரப்பட்ட மனிதர்களில் வெவ்வேறு வகையான விளைவுகளை உண்டாக்குவதைப் பற்றியும் மனித மரபியலில், மரபணுக்களில் இருக்கும் மரபுக்குறியீட்டு (genetic code) வேறுபாட்டைப் பயன்படுத்திப் புதிய மருந்துகளைக் கண்டறியும் மருந்தியலின் (pharmacology) புதிய துறை ஆகும்.

மருந்துகள் ஒவ்வொரு மனிதரிலும் ஒவ்வொரு விளைவை உண்டாக்கும்

தொகு

மருந்து ஒன்றாக இருப்பினும் அது ஒவ்வொரு மனிதரிலும் உண்டாக்கும் விளைவு வேறுவேறாக இருக்கும். இதற்கான காரணம் : மருந்துகள் நொதிகளின் தொழிற்பாட்டால் வளர்சிதைமாற்றத்திற்கு உள்ளாகின்றன. நொதிகள் எல்லாம் புரதங்கள். இப்புரதங்கள் மரபியல் குறியீட்டைக் கொண்ட டி.என்.ஏ வினால் உற்பத்தி செய்யப்படுகின்றன. எல்லா மனிதரின் மரபியல் குறியீடும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எனவே மருந்துகள் ஒவ்வொரு மனிதரிலும் உண்டாக்கும் விளைவும் வேறுவேறாக இருக்கின்றன.

எடுத்துக்காட்டு

தொகு

குளுக்கோசு 6- பாஸ்ஃபட்டேசு டிஹைட்ரோஜினேசு (G6PD) எனும் நொதிக்குறைபாடு உள்ள மனிதர்களுக்கு மலேரியாவிற்கு எதிரான மருந்துகள் கொடுத்தால் அவர்களுக்கு மிகக் கடுமையான குருதிச்சிதைவு (hemolysis) ஏற்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருந்தியல்_மரபியல்&oldid=2092655" இலிருந்து மீள்விக்கப்பட்டது