மருந்தில் கூற்றம்
மருந்தில் கூற்றம் என்பது சங்ககாலப் பாண்டியர் காலத்தில் ‘கூற்றம்’ என்னும் நாட்டுப் பகுப்பாக விளங்கிய ஒரு பகுதி. பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி என்னும் பாண்டியன் யானை மீதிருந்துகொண்டு மருந்தில் கூற்றத்துக் கோட்டைக் கதவுகளை உடைத்து அந்நாட்டை வென்றான்.[1]
மருந்தில் கணிச்சி என்பது [2] மும்முனைச் சூலத்தைக் குறிக்கும். மருந்தில் கூற்றம் என்பது இது போலக் சூலத்தைக் குறிக்காது.