மருந்து பயன்படுத்தப்படும் வழி

மருந்தியலில் அல்லது நச்சியலில் மருந்து பயன்படுத்தப்படும் வழி என்பது மாத்திரை, நீர்மம், நஞ்சு போன்றவை உடலுக்குள் எடுக்கப்படும் பாதையைக் குறிக்கும்.[1] இவ்வழிகள் மருந்தின் தன்மை, பயன்பாட்டின் நோக்கம், கால அளவு போன்ற காரணிகளால் வேறுபடுகின்றது. வாய்வழி, நாளவழி, தசைவழி, தோலின் கீழ்வழி, குதவழி போன்றன அன்றாடப் பயன்பாட்டில் உள்ள மருந்து உள்ளெடுக்கப்படும் வழிகள்.

வகைப்பாடுEdit

மருந்துகளைப் பயன்படுத்தும்போது அவற்றின் இலக்கு மருந்து பயன்படுத்தப்படும் அவ்விடத்திலோ அல்லது அவ்விடத்தைச் சூழவுள்ள பகுதிகளிலோ அல்லது அவற்றுடன் தொடர்புடைய பகுதிகளிலோ இருக்கமுடியும், அதேபோல ஒரு மருந்துப்பொருள் பயன்படுத்தத் துவங்கும் இடம் ஒன்றாகவும் இறுதியில் அது வினைபுரியும் இலக்கு வேறோருபகுதியாகவும் இருக்கலாம். இவற்றைக் கருத்திற்கொண்டு வழிகள் வகைப்படுத்தப்படுகின்றன.

உசாத்துணைகள்Edit

  1. TheFreeDictionary.com > route of administration Citing: Jonas: Mosby's Dictionary of Complementary and Alternative Medicine. 2005, Elsevier.