மரேத்தா வெசுட்டு
மரேத்தா என். வெசுட்டு (Mareta N. West, ஆகத்து 9, 1915 - நவம்பர் 2, 1998[1]) ஓர் அமெரிக்க வான்நிலவியலாளர் ஆவார். இவர் 1960 களில் நிலாவில் அப்பல்லோ 11 விண்கலத்தில் மாந்தர் இறங்குவதற்கான இருப்பிடத்தைத் தேர்வு செய்தார். இவர் தான் முதல் வான்நிலவியல் பெண்மணி ஆவார். இவரது எரித்த உடலெச்சங்கள் விண்வெளியில் ஏவப்பட்டன.
மரேத்தா வெசுட்டு Mareta West | |
---|---|
பிறப்பு | ஆகத்து 9, 1915 |
இறப்பு | நவம்பர் 2, 1998 | (அகவை 83)
இளமை
தொகுஇருந்து புவியியலில் இளவல் பட்டம் பெற்றார். இங்கே இவர் கப்பா கப்பா காமா அமைப்பின் உறுப்பினராக இருந்தார்.[2]
இவர் மூன்றாம் தலைமுறை ஒகலகோமர் ஆவார். இவரது பெற்றோர் 1889 இல் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்தனர்.[2]
வாழ்க்கைப்பணி
தொகுஇவர் 1940 களில், வளிமத் தொழில்துறையில் பாறைஎண்ணெய் புவியியலாளராகப் பணிபுரிந்தார். பின்னர் அரிசோனாவில் உள்ள அமெரிக்க புவியியல் அளக்கைத் துறையில் சேர்ந்துள்ளார்.[2] She was the first woman astrogeologist.[2]
இவர் முதல் நிலாப் பயணத்தில் நிலாவில் இறங்கும் இடத்தைத் தேர்வு செய்தவர் ஆவார்.[2]
வெளியீடுகள்
தொகு- Nuclear Power Reactor Sites in the Southeastern United States, 1978.
- West Side of the Moon
விண்வெளியில் ஏவப்பட்ட எரித்த உடலெச்சங்கள்
தொகுஇவரது எரித்த உடலெச்சங்கள் விண்வெளியோடம்-XL இல் விண்ணில் 2007 ஏப்பிரல் 28 இல் ஏவப்பட்டன. இது தான் மாந்த எச்சங்களை நிலாவில் புதைப்பதற்கான முயற்சி ஆகும்.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Find A Grave - Mareta West (1915-1998)". பார்க்கப்பட்ட நாள் 24 October 2013.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Mareta West, Celestis.com. (accessed October 24, 2013)
- ↑ Firm offers Moon burial, BBC News.
- ↑ Bergin, Chris (August 2, 2008). "SpaceX Falcon I fails during first stage flight". NASASpaceflight.com. http://www.nasaspaceflight.com/2008/08/spacex-falcon-i-fails-during-first-stage-flight/.