மர்பெல்லா கலங்கரைவிளக்கம்
மர்பெல்லா கலங்கரைவிளக்கம் மர்பெல்லா, தென் ஸ்பெயினில் உள்ள ஒரு கலங்கரை விளக்கம் ஆகும். இது 1864 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மேலும் இது 29 மீட்டர் உயரமுடையது. இது ஒரு தானியங்கும் மின் விளக்காகும். இந்த விளக்கு ஒளிமின் செல்கள் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் ஒளி ஒவ்வொரு 14.5 நொடிகளுக்கும் ஒருமுறை பளிச்சிடும். மேலும் இதன் ஒளி அதிகபட்சமாக 22 கடல் மைல்களுக்கு தெரியும்.