மறுபடியும் கணேஷ் (புதினம்)

நாவல்

மறுபடியும் கணேஷ், சுஜாதாவால் எழுதப்பட்டு 1978- இல் மாலைமதியில் தொடர்கதையாக வெளியானது.

மறுபடியும் கணேஷ்
மறுபடியும் கணேஷ்
நூலாசிரியர்சுஜாதா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைதுப்பறியும் நாவல்
வெளியீட்டாளர்விசா பப்ளிகேஷன்ஸ்[1]
வெளியிடப்பட்ட நாள்
2011
பக்கங்கள்200 பக்கங்கள்

கதைக் கரு

தொகு

ஷைலஜா என்னும் பெண், வெறுமையான தனது திருமண வாழ்க்கையில் இருந்து விடுதலை பெறலாமா , அல்லது தனது பழைய காதலனுடன் சென்று விடலாமா என்னும் மனக்குழப்பத்தில் வக்கீல் கணேஷிடம் ஆலோசனை கேட்கிறாள். ஆனால் மறுநாள் கணேஷ் அவளைச் சந்திக்க செல்லும் பொழுது அவள் தூக்கில் தொங்குகிறாள். அவள் மரணம் கொலையா, தற்கொலையா? கொலை என்றால் அவளைக் கொன்றது யார் என்று கணேஷும் வசந்தும் துப்பறியும் கதை.

கதை மாந்தர்கள்

தொகு
  • கணேஷ்
  • வசந்த்
  • ஷைலஜா
  • பிரபாகர்
  • தயாள்
  • ராமலிங்கம்
  • சுப்புலட்சுமி
  • பிரேமலதா
  • ராஜேந்திரன் மற்றும் பலர்.

மேற்கோள்கள்

தொகு