மறைக் குறியீட்டு அலகு
குறியாக்கவியல் மறைக் குறியீட்டு அலகு அல்லது இணையத் துண்டம் (block cipher) என்பது துண்டம் எனப்படும் பிட்களின் நிலைநீளக் குழுக்களாகச் செயல்படும் ஒரு தீர்மானகரமான வழிமுறை அலகு ஆகும். இவை பல குறியாக்க நெறிமுறைகள் அடிப்படையிலான கட்டுமான அலகுத் தொகுதிகளாகும். இவை தரவுகளைத் தேக்கி வைப்பதிலும் பரிமாறுவதிலும் தரவுப் பாதுகாப்பைப் பேணுவதிலும் குறியாக்கம் வழி உருவாக்கப்படும் ஏற்பு வரன்முறை அலகுகளாகும்.[1]
ஒரு மறைக்குறியீட்டலகு அத்துண்டங்களை மாறாத உருமாற்றமாக பயன்படுத்துகிறது. ஒரு பாதுகாப்பான மறைக்குறியீட்டு அலகு கூட ஒரு நிலையான [[விசைக்குவை]]யைப் பயன்படுத்தி ஒரு தொகுதி தரவை மட்டுமே ஒரு நேரத்தில் குறியாக்குவதற்கு ஏற்றது. மறைதிறமும் நம்பகத்தன்மையும் சார்ந்த பாதுகாப்பு இலக்குகளை அடைய பாதுகாப்பான வழியில் அவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்த இசையும்படி பல செயல்பாட்டு முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் , இவை உலகளாவிய ஹாஷ் செயல்பாடுகள் மற்றும் சூடோரேண்டம் எண் உருவாக்கிகள் போன்ற பிற குறியாக்க நெறிமுறைகளில் கட்டுமான அலகுகளாகவும் இடம்பெறலாம்.[2]
மேலும் காண்க
தொகு- மறைகுறிப் பாதுகாப்புச் சுருக்கம்
- குறியாக்கவியல் தலைப்புகள்
- XOR மறைக்குறியீடு
மேற்கோள்கள்
தொகு- ↑ Cusick, Thomas W.; Stanica, Pantelimon (2009). Cryptographic Boolean functions and applications. Academic Press. pp. 158–159. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780123748904.
- ↑ Menezes, Alfred J.; van Oorschot, Paul C.; Vanstone, Scott A. (1996). "Chapter 7: Block Ciphers". Handbook of Applied Cryptography. CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-8523-7. Archived from the original on 2021-02-03. பார்க்கப்பட்ட நாள் 2012-07-15.
மேலும் படிக்க
தொகு- Knudsen, Lars R.; Robshaw, Matthew (2011). The Block Cipher Companion. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783642173417.