மறைந்துபோன தமிழ் இலக்கண நூல்கள்

மறைந்துபோன தமிழ் இலக்கண நூல்கள் என்னும் தலைப்பில் புலவர் இரா. இளங்குமரன் ஒரு பட்டியலைத் திரட்டித் தந்துள்ளார். தாம் காட்டும் நூலைப்பற்றிய குறிப்பு எந்த நூலில் உள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அகர வரிசையில் அவை வருமாறு:

நூலின் பெயர் நூலைக் குறிப்பிடும் சான்று நூல்
அகத்தியர் பாட்டியல் சிதம்பரப் பாட்டியல் உரை
அடிநூல் யாப்பருங்கல விருத்தி உரை
அணியியல் யாப்பருங்கல விருத்தி உரை
அவிநயனார் களவியல் நவநீதப் பாட்டியல் உரை
ஆனந்த ஓத்து நவநீதப் பாட்டியல் உரை
இலக்கண சாரம் வேலாயுத முதலியார்
இலக்கண சிந்தாமணி சகராவ் முதலியார் 1880
இலக்கண சூடாமணி கிருட்டிண பிள்ளை 1883
இலக்கண தீபம் கையெழுத்து நூலகம்
இலக்கண நூலாதாரம் புதுச்சேரி, 1849
இலக்கண விளக்கப் பதிப்புரை மறுப்பு சபாபதி நாவலர்
இலக்கண வினா-விடை தாண்டவராய முதலியார்
இலக்கண வினா-விடை (நூல் கிடைத்துள்ளது) http://www.tamilvu.org/library/nationalized/scholars/pdf/religion/ilakkand_avinaavitai.pdf ஆறுமுக நாவலர்
இலக்கண வினா-விடை போப்பையர்
இலக்கணக் களஞ்சியம் வேதகிரி முதலியார்
இலக்கணச் சந்திரிகை அ.குமாரசாமிப் பிள்ளை
இலக்கணச் சுருக்கம் வாசுதேவ முதலியார்
இலக்கணத் திரட்டு வேதகிரி முதலியார்
இலக்கணம் சௌந்தர ராச ஐயங்கார்
இளந்திரையம் நன்னூல், மயிலைநாதர் உரை
இன்மணியாரம் நவநீதப் பாட்டியல் உரை
ஊசிமுறி இடைக்காடனார்
எழுத்து என்னும் சொல்லுக்கு இட்ட வயிரக் குப்பாயம் சிவஞான முனிவர்
கடிய நன்னியார் கைக்கிளைச் சூத்திரம் யாப்பருங்கல விருத்தி உரை
கவிசாகரம் வேதகிரி முதலியார்
கவிமயக் கறை யாப்பருங்கல விருத்தி உரை
கிரணியம் யாப்பருங்கல விருத்தி உரை
குமரம் இலக்கிய அகராதி
குறுவேட்டுவச் செய்யுள் யாப்பருங்கல விருத்தி உரை
கையனார் யாப்பியல் யாப்பருங்கல விருத்தி உரை
கொடுந்தமிழ் வீரமாமுனிவர்
கோவை சாரம் கையெழுத்து நூலகம்
சயந்தம் அடியார்க்கு நல்லார் உரை
சாதவாகனம் மயிலைநாதர் உரை
சித்திரக்கவி உரையுடன் கையெழுத்து நூலகம்
சித்திரக்கவி விளக்கம் பரிதிமாற் கலைஞர்
சிற்றிசை இலக்கிய அகராதி
சிற்றெட்டகம் யாப்பருங்கல விருத்தி உரை
செந்தமிழ் வீரமாமுனிவர்
செய்யுள் வகைமை நவநீதப் பாட்டியல் உரை
செய்யுளியல் யாப்பருங்கல விருத்தி உரை
செயிற்றியம் யாப்பருங்கல விருத்தி உரை
தக்காணியம் யாப்பருங்கல விருத்தி உரை
தத்ராத்திரேயப் பாட்டியல் சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும்
தமிழ் இலக்கண சிந்தாமணி இலக்கிய அகராதி
தமிழ் இலக்கணச் சுருக்க வினா-விடை இலக்கிய அகராதி
திணை நூல் யாப்பருங்கல விருத்தி உரை
திருப்புர ஆசிரியர் தூக்கியல் நவநீதப் பாட்டியல் உரை
தொனி விளக்கு பி.சுப்பிரமணிய சாத்திரி
நக்கீரர் நாலடி யாப்பருங்கல விருத்தி உரை
நல்லாறன் மொழிவரி யாப்பருங்கல விருத்தி உரை
நன்னூல் இலகு போதம் ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை
பரிப்பெருமாள் யாப்பிலக்கணம் யாப்பருங்கல விருத்தி உரை
பருணர் பாட்டியல் நவநீதப் பாட்டியல் உரை
பல்காப்பியப் புறனடை யாப்பருங்கல விருத்தி உரை
பல்காப்பியம் யாப்பருங்கல விருத்தி உரை
பனம்பாரம் யாப்பருங்கல விருத்தி உரை
பாட்டியல் மரபு யாப்பருங்கல விருத்தி உரை
பாடலம் யாப்பருங்கல விருத்தி உரை
புணர்ப்பாவை புறப்பொருள் விளக்க வசனம் ந.சி.கந்தையாப் பிள்ளை
பூத புராணம் நச்சினார்க்கினியர் உரை, இறையனார் களவியல் உரை
பெரிய முப்பழம் யாப்பருங்கல விருத்தி உரை
பெருவளநல்லூர் பாசண்டம் யாப்பருங்கல விருத்தி உரை
பொய்கையார் கணவியல் யாப்பருங்கல விருத்தி உரை
பொய்கையார் பாட்டியல் யாப்பருங்கல விருத்தி உரை
போக்கியல் யாப்பருங்கல விருத்தி உரை


கருவிநூல் தொகு

புலவர் இரா.இளங்குமரன், இலக்கண வரலாறு, 2006
தமிழ் இலக்கண நூல்கள், பதிப்பாசிரியர் ச.வே.சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, 2007