மறைமலை அடிகள் பாலம்
மறைமலை அடிகள் பாலம் (முன்பு மர்மலாங் பாலம் ) என்பது, அண்ணாசாலையில் அமைந்துள்ள, அடையாறு ஆற்றின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளை இணைக்கும் சாலைப் பாலமாகும்.[1]
வரலாறு
தொகுஅடையாறு ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள இந்த மிகப் பழமையான மர்மலாங் பாலம், ஆர்மீனிய வணிகரான கோஜா பெட்ரஸ் உஸ்கான் (ஆங்கிலம்: Coja Petrus Uscan) என்பவரால் 1728 ஆம் ஆண்டில், ஒரு லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டது. அருகில் உள்ள மாம்பலம் கிராமத்தின் பெயரால் இந்தப் பாலம் பெயரிடப்பட்டது. இது மர்மலான் அல்லது மர்மலாங் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டது.[1] இந்தப் பாலம் பழுதடைந்தததால் 1966 ஆம் ஆண்டு புதிய பாலம் கட்டப்பட்டது.[2] புதிய பாலத்திற்கு தமிழாசிரியரும், தூய தமிழ் இயக்கத்தின் ஆதரவாளருமான மறைமலை அடிகளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது .
சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தை ஒட்டிய பாலத்தின் வடக்கு முனையில் உஸ்கான் பாலம் கட்டியதை நினைவு கூரும் விதமாக ஒரு பெயர்பலகை காணப்படுகிறது.[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Diwan Bahadur S. E. Runganadhan, ed. (1939). Madras Tercentenary Celebration Committee Commemoration Volume. Indian Branch, Oxford Press. p. 124.
- ↑ Frederick, Prince (1 July 2009). "Memories of Madras: From Saidapet to Madras". தி இந்து இம் மூலத்தில் இருந்து 8 ஆகஸ்ட் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090808054807/http://www.hindu.com/mp/2009/07/01/stories/2009070150200100.htm.
பிற ஆதாரங்கள்
தொகு- Muthiah, S. (2004). Madras Rediscovered. East West Books (Madras) Pvt Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-88661-24-4.