மலங்கன்குடியிருப்பு

அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

மலங்கன்குடியிருப்பு தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தில் செயங்கொண்டம் நகராட்சியில் 3 வது வார்டாக உள்ளது. திருச்சிராப்பள்ளியில் இருந்து 95 ஆவது கி.மீ. அரியலூர், கும்பகோணம் மற்றும் விருத்தாசலத்தில் இருந்து 40 கி.மீ. சிதம்பரத்தில் இருந்து 48 கி.மீ. இவ்வூர் மலங்கன்குடியிருப்பு என்று பெயர் வரக்காரணம் மலங்கன் என்ற வகையறாவைச் சார்ந்தவர்கள் இவ்வூர் ஓடையின் வழியாக வந்து குடியேறியதால் அவ்ஓடைக்கு பெயர் மலங்கன்சாவடி ஓடை என்றும் ஊருக்கு மலங்கன்குடியிருப்பு என்றும் பெயர் வந்ததாக கூறுகின்றனர்.

இவ்வூருக்கு மலங்கற்குடியிருப்பு மற்றும் வீரர்கள் குடியிருப்பு என்றும் பெயர்கள் இருந்ததாக முன்னோர்களால் கூறக்கேட்டிருக்கின்றேன். அதற்கு காரணம் கங்கைகொண்டசோழபுரத்தை தலைநகராகக் கொண்டு சுமார் 950 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இராசேந்திரசோழனுக்கு படைவீரர்கள் வாழ்ந்த ஊர்ராக இருந்தது என்பதை மாளிகைமேடு கல்வெட்டில் இருந்து அறிய முடிந்தது. மேலும் இவ்வூர் ஆலடிக்குட்டை ஏரியில் தண்ணீர் வற்றினால் பழங்காலத்து சமாதிகள் பல இருப்பதை தற்பொழுதும் காணலாம்.

தற்பொழுது இவ்வூரில் வன்னியர்கள் பெரும்பான்மையாகவும் ஆதிதராவிடர்கள் மற்றும் பழங்குடியினரும் சேர்ந்து சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தொழில் விவசாயம் மட்டுமே.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலங்கன்குடியிருப்பு&oldid=823262" இலிருந்து மீள்விக்கப்பட்டது