மலபார் செங் கேளையாடு

மலபார் செங் கேளையாடு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
முந்தியாகசு
இனம்:
மு. மலபாரிகசு
இருசொற் பெயரீடு
முந்தியாகசு மலபாரிகசு
லைடெக்கர், 1915[1]

மலபார் செங் கேளையாடு (முந்தியாகசு மலபாரிகசு) என்பது இந்தியா மற்றும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு கேளையாடு மான் சிற்றினமாகும்.[1] மலபார் செங் கேளையாடு இந்தியக் குரைக்கும் மான் என்றும் அழைக்கப்படுகிறது.

விளக்கம்

தொகு

இது தெற்காசியாவின் காடுகளில் காணப்படும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மான் சிற்றினமாகும். இது சுமார் 20 முதல் 25 அங்குல உயரமுடையது. இது மற்ற மான் இனங்களுடன் ஒப்பிடும்போது சிறியதாக உள்ளது. மலபார் செங் கேளையாடு ஒரு தனித்துவமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. இதன் சிவப்பு-பழுப்பு நிறத் தோல் மூலம் வேறுபடுத்தப்படுகிறது. உணவின் அடிப்படையில், மலபார் செங் கேளையாடு முதன்மையாக ஒரு தாவர உண்ணி ஆகும். இவற்றின் உணவில் இலைகள், தளிர்கள், பழங்கள் மற்றும் பூக்கள் உட்படப் பல்வேறு தாவரப் பொருட்கள் உள்ளன.[2]

நடத்தை

தொகு

மலபார் செங் கேளையாடு தனியாக வாழும் விலங்காகும். பொதுவாக இவை தனியாகவோ அல்லது இணையாகவோ காணப்படும். இவை அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். பகலின் வெப்பமான நேரங்களில் ஓய்வெடுக்க விரும்புகின்றன. இந்த மான்கள் இவற்றின் பிராந்திய நடத்தைக்காக அறியப்படுகின்றன. இவற்றின் வாழிடப் பிரதேசங்களை இவற்றின் தலையில் அமைந்துள்ள வாசனை சுரப்பிகளால் குறியிடுகின்றன. இவை தங்கள் பொதுவான பெயரைக் கொடுக்கும் ஒரு தனித்துவமான குரல் மூலம் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கிறது. பொதுவாக அக்டோபர் மற்றும் திசம்பருக்கு இடையில் ஏற்படும் இனப்பெருக்கக் காலத்தில், ஆண் மலபார் செங் கேளையாடு ஆதிக்கத்தை நிலைநாட்டவும் பெண் கேளையாடுகளை அணுகவும் சண்டைகளில் ஈடுபடுகின்றன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "ASM Mammal Diversity Database". www.mammaldiversity.org. பார்க்கப்பட்ட நாள் 2024-10-15.
  2. 2.0 2.1 "Malabar Red Muntjac - Muntiacus Malabaricus - Animal Information". animalinformation.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-05-06. பார்க்கப்பட்ட நாள் 2024-10-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலபார்_செங்_கேளையாடு&oldid=4118863" இலிருந்து மீள்விக்கப்பட்டது