மலமுண்ணுதல் (Coprophagia) என்பது ஒரு உயிரினம் தனது மலத்தையோ அல்லது பிறிதொரு உயிரினத்தின் மலத்தையோ உண்ணுதல் ஆகும்.

மலமுண்ணும் பூச்சி

தாவரங்களில் தொகு

ஊனுண்ணித் தாவரமான நெப்பெந்தசு (Nepenthes) எனும் குடுவைத்தாவரம் ஒன்றியவாழ்வில் உள்ள விலங்குகளின் மலத்திலிருந்து ஊட்டச்சத்து பெறும்.

பூச்சிகளில் தொகு

தாவர உண்ணிகளின் சாணி பெரும்பாலும் பாதி செரிக்கப்பட்டதாகவே இருக்கும். அவற்றை சாணிவண்டுகள், போன்றவை உண்டு செரிக்கும்.

விலங்குகளில் தொகு

நாய், பன்றிகள் அனைவரும் அறிந்த மலமுண்ணிகள் ஆகும். வீட்டில் வளர்க்கும் பன்றிகளை எவ்விதமான மலமும் உண்ணவிடக் கூடாது. இது நோய்த்தொற்றை உருவாக்கும்.

நாய்களில் தொகு

மலமுண்ணும் நடத்தை நாய்களில் காணப்படுவது பல தமிழ்ப்பழமொழிகளின் மூலம் அறியப்படுகிறது.[1] இந்நடத்தையின் காரணம் எதுவென அறுதியிட்டு அறியப்படவில்லை.[2] கவலை, எசமானர் கவனத்தைத் திருப்புதல், நோய்நிலை, பசி போன்றவை காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. நாய் உணவில் மிளகு, பைன் ஆப்பிள் போன்றவற்றைச் சேர்ப்பது மலமுண்ணலைத் தடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

மனிதர்களில் தொகு

மனித சமூகத்தில் மலம் உண்ணல் என்பது மிகவும் இழிந்த ஒன்றாக கருதப்படுகிறது. பாலியல் ரீதியாக மலம் தின்னல், மலம் விரும்புதல் என்று அறியப்படுகிறது. தமிழகத்தில் ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்பட்டோர் மற்றும் உதாசீனப்படுத்தப்பட்டோர் என்று கருதி ஒருசிலரை கட்டாயப்படுத்தி மலம் தின்னச் செய்த நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.[3]

மேற்கோள்கள் தொகு

  1. அ. நாயைக் கூப்பிடுற நேரத்தில நாமே அள்ளிடலாம்.
    ஆ. நாய்க்குத் தெரியாத பீக்காடு உண்டா ?
  2. Hofmeister, Erik, Melinda Cumming, and Cheryl Dhein (2001). Owner Documentation of Coprophagia in the Canine. http://www.vetmed.wsu.edu/pets/_archive/study.htm. பார்த்த நாள்: 2011-02-02.  Accessed November 17, 2005.
  3. "தீண்டாமைக் கொடுமையால் மலம் உண்ணக் கட்டாயப்படுத்தப்பட்டோர்". Archived from the original on 2011-09-07. பார்க்கப்பட்ட நாள் 2011-02-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலமுண்ணல்&oldid=3566755" இலிருந்து மீள்விக்கப்பட்டது