மலாக்கா அஞ்சல்தலை அருங்காட்சியகம்
மலாக்கா அஞ்சல்தலை அருங்காட்சியகம் (Malacca Stamp Museum)(மலாய்: Muzium Setem Melaka) என்பது மலேசியாவின் மலாக்கா, மலாக்கா நகரில் உள்ள ஒரு அஞ்சல் அருங்காட்சியகம். இது உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட கட்டிடத்தில் அமைந்துள்ளது. மேற்கத்தியக் கட்டிடக்கலையின் வடிவம் மற்றும் பண்புகளை இக்கட்டடம் கொண்டுள்ளது.
மலாக்கா மாநில அருங்காட்சியகம் | |
நிறுவப்பட்டது | 2007 |
---|---|
அமைவிடம் | மலாக்கா நகரம், மலாக்கா, மலேசியா |
ஆள்கூற்று | 2°11′29.8″N 102°14′58.3″E / 2.191611°N 102.249528°E |
வகை | அருங்காட்சியகம் |
இந்த அருங்காட்சியக கட்டடம் முதலில் இரண்டாம் உலகப் போரின் இறுதி வரை மலாக்காவில் வாழ்ந்த நெதர்லாந்து பிரமுகர்களின் வசிப்பிடமாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் பயன்பாட்டிலிருந்து கட்டடம் கைவிடப்பட்டது. 19 மார்ச் 1954-ல், மலாக்காவிலுள்ள பிரித்தானிய ஆணையரான விசுடம், இக்கட்டடித்தினை மலாக்கா மாநில அருங்காட்சியகமாக மாற்றினார். 1982-ல் இசுடாட்துய்ஸுக்கு இந்த அருங்காட்சியகம் மாற்றப்பட்டது. இந்த கட்டடம் ஒரு காலத்தில் மலாக்கா இசுலாமிய அறக்கட்டளை மற்றும் மலாக்கா நகரக் குழுவின் அமலாக்கப் பிரிவு அலுவலகமாகச் செயல்பட்டது. 2004ஆம் ஆண்டில், இந்த கட்டடம், அருங்காட்சியகம் மற்றும் பழங்காலத் துறையால் புதுப்பிக்கப்பட்டு மலாக்கா மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டில், மாநில அரசாங்கம், போஸ் மலேசியாவுடன் இணைந்து, இக்கட்டிடத்தில் தபால் அருங்காட்சியகத்தை அமைக்க முடிவு செய்தது.[1]
மேலும் பார்க்கவும்
தொகு- மலேசியாவில் உள்ள அருங்காட்சியகங்களின் பட்டியல்
- அஞ்சல் அருங்காட்சியகம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Erhern. "Malacca Stamp Museum". Amazing Melaka. Archived from the original on 8 February 2015. பார்க்கப்பட்ட நாள் 31 January 2015.