மலேகா பேகம்

வங்காளதேசக் கல்வியாளர்

மலேகா பேகம் (Maleka Begum) (பிறப்பு 1944) ஓர் வங்காளதேச பெண்ணியவாதியும், எழுத்தாளரும், கல்வியாளரும் ஆவார்.[1][2] இவர் வங்காளதேசத்தில் வெளிவரும் புரோதம் அலோ என்ற தினசரி பத்திரிக்கையின் ஆசிரியர் மதியூர் ரகுமானின் மனைவி ஆவார்.

சுயசரிதை தொகு

பேகம் 1944 இல் அப்துல் அஜீஸ் மற்றும் பகிமா பேகம் ஆகியோருக்குப் பிறந்தார். செர்-இ-பங்களா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் இடைநிலைக் கல்வியை முடித்தார்.[3] டாக்கா பல்கலைக்கழகத்தில் வங்காள இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், சமூகவியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார்.[2]

பேகம் மத்திய பெண்கள் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கிறார்.[4] டாக்கா பல்கலைக்கழகத்தில் பெண்கள் மற்றும் பாலின ஆய்வுகள் துறைக்கு வருகை தரும் பேராசிரியராக இருக்கிறார். பேகம் வங்காளதேச மகிளா பரிசத்தின் நிறுவன பொதுச் செயலாளர்களில் ஒருவர்.[5][6]

எழுத்துகள் தொகு

மலேகா பேகம் பெண்கள் மற்றும் பாலின பிரச்சனைகள் குறித்து 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.[7]

விருதுகள் தொகு

2012 இல் அனன்யா இலக்கிய விருது இவருக்கு வழங்கப்பட்டது.[7]

மேற்கோள்கள் தொகு

  1. "Maleka Begum Talks about Gender Issues in Bangladesh Politics". 2009-02-01 இம் மூலத்தில் இருந்து 2017-08-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170827095239/https://www.voabangla.com/a/a-16-2009-02-01-voa5-94468779/1400320.html. 
  2. 2.0 2.1 মালেকা বেগম [Maleka Begum]. Porua (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 2017-08-27.
  3. Barua, Dwaipayan (2008-01-02). "Celebrations take alumnae back to joyous schooldays". The Daily Star (Dhaka) இம் மூலத்தில் இருந்து 2017-08-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170827090652/http://www.thedailystar.net/news-detail-17390. "Women's rights leader Dr Maleka Begum, former student" 
  4. "Syndicate Members". Central Women's University.
  5. "Commemorative meeting on Nurjahan Begum". Bangladesh Mahila Parishad. 2016-07-19. Archived from the original on 2017-03-11. பார்க்கப்பட்ட நாள் 2017-08-27. Bangladesh Mahila Parishad president Ayesha Khanam, founding general secretary Maleka Begum
  6. Hossain, Masura (2017-04-04). "Bangladesh Mahila Parishad: 47 years of excellence". Prothom Alo (Dhaka) இம் மூலத்தில் இருந்து 2017-05-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170509140854/http://en.prothom-alo.com/bangladesh/news/144357/Bangladesh-Mahila-Parishad-47-years-of-excellence. "Professor of Central Women's' University Maleka Begum was involved with Mahila Parishad since its beginning." 
  7. 7.0 7.1 "Maleka Begum gets literary award". The Daily Star. March 11, 2012. http://www.thedailystar.net/news-detail-225812. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேகா_பேகம்&oldid=3837573" இலிருந்து மீள்விக்கப்பட்டது