மலேசியாவின் உயிரி எரிபொருள் கொள்கை

மலேசியாவின் உயிரி எரிபொருள் கொள்கை (Biofuel policy of Malaysia) மலேசியாவின் தேசிய உயிரி எரிபொருள் கொள்கை ஆவணத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

பங்குதாரர்கள் தொகு

சப்பானை தளமாகக் கொண்ட தீசல் இயந்திரங்கள் தயாரிக்கும் யன்மார் நிறுவனம் பாமாயில் உயிரிதீசலின் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சி செய்ய மலேசியாவில் ஒரு ஆராய்ச்சி வசதியை உருவாக்க திட்டமிட்டது. நிறுவனத்தின் இயந்திரங்கள் மற்றும் மின் உற்பத்தி இயந்திரங்களுக்காக அந்நிறுவனம் உருவாக்கும் தொழில்துறை தீசல்களுக்கு மாற்றாக உயிரி தீசலை உருவாக்கி சோதிக்க திட்டமிட்டது. இதற்காக மலேசிய நகரமான கோத்தா கினபாலுவில் ஆராய்ச்சி வசதியை அமைத்தது.[1]

பெட்ரோல் நிலையங்களில் அறிமுகம் தொகு

2014 ஆம் ஆண்டு பல தாமதங்களுக்குப் பிறகு, மலேசியா நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் பி5 உயிரிதீசல் விற்பனை படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டது. [2][3]

பி5 உயிரிதீசல் என்பது 5% பாமாயில் அல்லது பாம் மெத்தில் எசுத்தர் மற்றும் தீசல் ஆகியவற்றின் கலவையாகும். இந்த பனை உயிரிடீசல் பயன்பாட்டு முயற்சிக்கு, நாட்டில் மானிய மற்றும் மானியமில்லாத இரு துறைகளையும் ஆதரிக்க ஆண்டுக்கு 500,000 டன் பாம் மெத்தில் எசுத்தர் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிற்காலத்தில் பி7 உயிரிதீசல் பி5 உயிரிதீசலுக்கு மாற்றாக மாற்றப்படும் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. [4][5]

மேற்கோள்கள் தொகு