மலேசியா – சிங்கப்பூர் – மியன்மார் தமிழ் உறவுப்பாலம்: மாநாடு 2014
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மலேசியா – சிங்கப்பூர் – மியன்மார் தமிழ் உறவுப்பாலம்: மாநாடு 2014 என்பது எதிர்வரும் சூன் 7-8 ஆம் திகதிகளில் நடைபெற ஒழுங்குசெய்யப்படும் ஒரு மாநாடும் சுற்றுலாவும் ஆகும். நெடுங்காலம் தனிமைப்படுத்தப்பட்டு, சிறுபான்மையினர் ஒடுக்குமுறைக்கும் உட்பட்டு இருந்த மியன்மாரில் அண்மைக் காலத்தில் மேம்பட்ட அரசியல் சூழல் தோன்றி உள்ளது. நெடுங்காலம் ஒடுக்குமுறைக்குள் இருந்த தமிழ் மொழி, பண்பாட்டு, அடையாளக் கூறுகளை வளர்க்க உதவுவதை நோக்கக் கொண்டு இந்த அயல்நாடுகளுக்கு இடையிலான உறவுப்பால மாநாடு அமையவுள்ளதாகத் தெரிவிக்கிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டினை மலேசிய செயகூர் தமிழர் சங்கம், சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள், மியன்மார் தமிழர் அமைப்புகள் இணைந்து மேற்கொள்கின்றன.
மாநாட்டின், சுற்றுலாவின் நோக்கங்கள்
தொகு- மலேசியா – சிங்கப்பூர் – மியன்மார் தமிழ் ஆர்வலர்களிடையே நட்புறவை வளர்க்கவும்; தமிழ்மொழி, பண்பாடு மேன்மை அடைய ஏற்ற வழிவகைகளைக் கண்டறிதல்.
- மூன்று நாட்டு இளையோரிடையே தமிழ்மொழி, பண்பாடு சார்ந்த விழிப்புணர்வை விதைப்பதற்கான வழிவகைகளைக்கண்டறிந்து வேண்டிய உதவிகளை நல்குதல்.
- இந் நாடுகளில் குறிப்பாக மியன்மாரில் செயல்படும் தமிழ் வளர்ச்சி மையங்களில் தமிழ்க் கல்வியை கற்பிக்கவும், நூலகங்களை அமைக்கவும் உதவி நல்குதல்.