மலைகளின் வகைகள்

மலைகள் என்பது புவிப்பரப்பின் மேல் காணப்படும் அதிக உயரமுள்ள ஒரு பெரும் நிலத்தோற்றமாகும்.மலைகளின் சரிவு,உயரம் மற்றும் தோற்றங்களின் அடிப்படையில் வரையறுக்கப்படுகின்றன,மலைகளின் அமைப்பைப் பொறுத்து நான்கு முக்கியப் பிரிவுகளாக பிரிக்கலாம்.அவை

  1. மடிப்பு மலைகள்
  2. பிண்ட மலைகள்
  3. எரிமலைகள்
  4. எஞ்சிய மலைகள்

மடிப்பு மலைகள் தொகு

புவியின் உள்பகுதியில் பாறையிடுக்குகளில் ஏற்படும் அழுத்தம் மற்றும் கிடை அசைவுகளின் காரணமாக மடிப்பு மலைகள் ஏற்படுகின்றன.பெரும்பாலும் மடிப்பு மலைகளின் பாறைகள் படிவுப் பாறைகளாகும்.இமயமலை,ஆரவல்லீஸ்,ஆல்ப்ஸ்,ராக்கீஸ் முதலியவை மடிப்பு மலைத்தொடராகும்.

 

பிண்ட மலைகள் தொகு

இரு தாழ் நிலங்களுக்கு இடையே உள்ள உயரமான ஓர் உயர்நிலப்பகுதியே பிண்ட மலைகள் எனப்படும்.புவியின் மேற்பரப்பில் சில பகுதிகளில் ஏற்படும் இழுவிசையால் நிலத்தில் வெடிப்புகள் ஏற்படுகிறது,.இவ்வெடிப்பே பிளவாகும்.இணையாக அமைந்துள்ள இரு பிளவுகளுக்கு இடையே உள்ள நிலப்பகுதி நிலஅசைவுகளின் காரணமாக உயர்த்தப்படுவதால் பிண்டமலை தோன்றுகிறது.இந்தியாவின் விந்திய மலை,ஐரோப்பாவின் வஜஸ்,பிளாக் ஃபரரஸ்ட் முதலிய மலைகள் பிண்ட மலைகள் ஆகும்.

 

எரிமலைகள் தொகு

புவியின் உள்ளே ஆழத்தில் பாறைகள் திரவ நிலையில் கொதித்துக் கொண்டிருக்கும் இதற்கு பாறைக் குழம்பு (லாவா) என்று பெயர்,இப்பாறைக் குழம்பு புவியோட்டின் சிறு துவாரங்கள் அல்லது பிளவுகள் வழியாக மேலே வந்து உறைவதால் இம் மலைகள் தோன்றுகின்றன.ஜப்பானின் புகழ்பெற்ற ஃபியூஜியாமா,இத்தாலியில் வெசுவியஸ்,ஆண்டீஸின் சிம்பராசோ,கோம்படா பாக்ஸி முதலியன எரிமலைகள் ஆகும்.

 

எஞ்சிய மலைகள் தொகு

ஆறு,காற்று,பனியாறு போன்ற செயல்களால் சுற்றுப்புறப்பகுதி அரித்துத் தாழ்த்தப்பட்ட பின்னர் தரை மட்டத்திற்கு மேலாக நின்று கொண்டிருக்கும் உயர் நிலப்பரப்பையே எஞ்சிய மலைகள் எனப்படும்.கடினப் பாறையானதால்,அரிக்கப்படாமல் நீடித்து நிற்கின்றன.ஸ்காட்லாந்தின் உயர் நிலங்கள்,ஸ்பெயினின் மத்திய மலைகள்,அமெரிக்க ஜக்கிய நாடுகளின் மேற்கு பீட பூமிகளில் காணப்படும் மலைகள் எஞ்சிய மலைகள ஆகும்.

மேற்கோள் தொகு

[1]

                                                                                        ..
  1. புவி நிலத்தோற்றங்கள். தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம். பக். 108,109. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலைகளின்_வகைகள்&oldid=2748861" இலிருந்து மீள்விக்கப்பட்டது