மலைக் குறிக்கோடுகள்
மலைக்குறிக் கோடுகள் என்பது மலைகளின் பக்கங்களின் சரிவு நோக்கி உச்சியிலிருந்து அடிவரை விட்டுவிட்டு வரையப்படும் சிறுசிறு கோடுகளாகும். இவை நீரோடும் திசையில் குறிக்கப்படும். இக்கோடுகள் வண்சரிவில் நெருக்கமாகவும் மென் சரிவில் இடைவெளி விட்டும் அமைகின்றன. சம நிலங்களில் இக்கோடு வரையப்படுவதில்லை. இம்முறையிலுள்ள குறைப்பாடுகளென்னவெனின் இவை நிலத்தின் பொதுவான சரிவைக்கூறுமேயல்லாது சரிவின் அளவையோ ஓரிடத்தின் உண்மையான உயரத்தையோ கூறாது. பீடபூமிகளும் தாழ்சமவெளிகளும் கோடுகளற்றுக் காணப்படுவதால் வேறுபாடு தொியாது.மேலும் மேப்பில் மலைக்குறிக் கோடுகள் நெருக்கமாக வரையப்படுவதால் பிற விவரங்களைக் குறிக்க முடிவதில்லை. எனவே பெரும்பாலும் இவற்றை இயற்கையமைப்பை மட்டுமே குறிக்கும் படங்களில் பயன்படுத்துவா்.
சான்றுகள்
தொகுதமிழ்நாட்டுப் பாடநுால் கழகம் கல்லுாரிச் சாலை சென்னை 600 006(மேல்நிலை இரண்டாமாண்டு புவியியல்)