மலை உருவாக்கம்

மலை உருவாக்கம் (Mountain formation) என்பது பூமியில் மலை எவ்வாறு உருவானது என்ற கேள்விக்கு உரிய விடையைத் தருகின்ற ஒரு புவியியல் செயல்முறையாகும். புவியின் மேலோட்டில் உள்ள புவித் தட்டுகள் பெரிய அளவில் நகர்ந்த காரணத்துடன் இச்செயல்முறைகள் தொடர்பு கொண்டுள்ளன [1]. மடிதல், உடைதல், பொங்குதல், ஊடுறுவல், உருமாறுதல் முதலிய செயல்கள் அனைத்துமே மலை உருவாக்கச் செயல்முறையின் பகுதிக் கூறுகளாகும் [2]. மலைகளின் உருவாக்கம் மலைகளில் இடம்பெற்றுள்ள புவியியல் கட்டமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருப்பவை எனக் கருத வேண்டிய அவசியம் இல்லை [3].

உந்துகைப் பிளவு நகர்வுகள் மலை உருவாக்கத்தின் முக்கியமான பகுதிக் கூறாகும்
உந்துகையால் மடிப்பு மலை தோன்றும் முறை பற்றிய விளக்கம்

புவியோட்டின் செயல்முறைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட நிலப்பரப்பின் அம்சங்களைப் புரிந்து கொள்வது நிலவுருவாக்கவியல் எனப்படுகிறது.

மலைகளின் வகைகள் தொகு

மலைகள் பொதுவாக முக்கியமான மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை எரிமலைகள், மடிப்பு மலைகள், செங்குத்து மலைகள் என்பனவாகும். உள்ளுர் அளவுகோல்களின் அடிப்படையில் அப்பகுதி மலைகளை மேலும் பலவாறாகப் பிரித்து அறியலாம்.


ஓரோஜெனிக் மலைகளைப் போலன்றி, ஸ்காண்டிநேவிய மலைகள், கிழக்கு கிரீன்லாந்து, பிரேசிலிய ஹைலேண்ட்ஸ் அல்லது ஆஸ்திரேலியாவின் பெரிய பிளவு வரம்பு போன்ற உயர்ந்த செயலற்ற கண்ட விளிம்புகளை விளக்கும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட புவி இயற்பியல் மாதிரி இல்லை. வெவ்வேறு உயர்த்தப்பட்ட செயலற்ற கண்ட விளிம்புகள் பெரும்பாலும் மேம்பாட்டின் அதே வழிமுறையைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த வழிமுறை பூமியின் லித்தோஸ்பியரில் உள்ள தொலைதூர அழுத்தங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம். இந்த பார்வையின் படி, உயர்த்தப்பட்ட செயலற்ற விளிம்புகளை மாபெரும் ஆன்டிக்லினல் லித்தோஸ்பெரிக் மடிப்புகளுடன் ஒப்பிடலாம், அங்கு ஒரு மெல்லிய முதல் அடர்த்தியான மேலோடு மாற்றம் மண்டலத்தில் செயல்படும் கிடைமட்ட சுருக்கத்தால் மடிப்பு ஏற்படுகிறது (அனைத்தும் செயலற்ற விளிம்புகள்)

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலை_உருவாக்கம்&oldid=3110528" இருந்து மீள்விக்கப்பட்டது