மல்பதய நாட்டியம்

இலங்கையில் சப்பிரகமுவ பிரதேச நாட்டிய வடிவத்தினைச் சேர்ந்த ஒன்றாகும்

மல்பதய நாட்டியம் என்பது இலங்கையில் சப்பிரகமுவ பிரதேச நாட்டிய வடிவத்தினைச் சேர்ந்த ஒன்றாகும். சப்ரகமுவ பிரதேசம் எனும்போது கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பிரதேசங்களாக வரையறுக்கலாம்.

இலங்கையில் சிங்கள மக்களின் கலாசாரப் பாரம்பரியங்கள் பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபட்டுக் காணப்படுகின்றது. தாழ் நில சிங்கள மக்களின் பண்பாட்டுப் பாரம்பரியங்களும் உயர்நில சிங்கள மக்களின் பண்பாட்டுப் பாரம்பரியங்களும் வேறுபட்டிருப்பதைப் போலவே ஏனைய பிரதேசங்களில் வாழும் சிங்கள பாரம்பரியங்களும் வித்தியாசப்பட்டிருப்பதை இலங்கையில் சிறப்பாக அவதானிக்கலாம்.

மல்பதய நாட்டியமானது சிறந்த அறுவடையை பெற்றுக் கொள்ளும் நோக்கிலும், தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பு மற்றும் நிவாரணம் என்பவற்றைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டும் பெண் தெய்வமான பத்தினித் தெய்வத்தினைச் சாந்தப்படுத்தி கருணை பெறுவதற்காக ஆடப்படும் நடனமாக குறிப்பிடலாம். இந்நடனம் 'கம்பதுவ' நடனம் எனவும் அழைக்கப்படுகின்றது.

இந்நடனத்தின் சிறப்பு இது பௌத்த சமய நிகழ்வுகளுடன் இணைந்ததொன்றாக காணப்படுவதாகும். மல்பதய நாட்டியம் நடனம், உரைநடை ஆகியன இணைந்து காணப்படும். இந்நாட்டியத்தில் பிரதானமாக பயன்படுத்தப்படும் இசைக்கருவி 'தவில் பெறய' என அழைக்கப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்பதய_நாட்டியம்&oldid=680206" இலிருந்து மீள்விக்கப்பட்டது