மல்லப்புரம்

இந்தியா-தமிழ்நாடு மாநிலம், மதுரை மாவட்டத்தில்  மல்லப்புரம் என்ற கிராமம் உள்ளது.

புவியியல்

தொகு

மதுரை மாவட்டத்தில், பேரையூர்  வட்டத்தில் உள்ளது.  இது உசிலம்பட்டியில்  இருந்து எம்.கல்லுப்பட்டிக்கு (ஏழுமலை) செல்லும் வழியில் அமைந்துள்ளது. இது 350 மீட்டர் உயரத்தில் உள்ளது. தேனி செல்லும் வழியில் உள்ள  இக்கிராமத்திற்குச் செல்ல பொதுவான  போக்குவரத்து இல்லை.

இக்கிராமத்தில் திருவள்ளுவர் கல்வி   நிறுவனம் உள்ளது. இதில் ஆசிரியர்    கல்வி பட்டயப்பயிற்சி, இளங்கலை  மற்றும் முதுகலை கல்வியியல் படிப்புகள் வழங்கப்படுகின்றன.  மேலும் தமிழ்த்தாய் ஆசிரியர் பயிற்சி நிறுவனமும், திருவள்ளுவர்  பல்தாெழில்நுட்பக்கல்லூரியும் உள்ளன.

மக்கள்தாெகை

தொகு

2001 மக்கள்தொகை கணக்கெடுக்கின்படி 11030 மக்கள் உள்ளனர். ஆண்கள் 50 சதவிகிதமும், பெண்கள் 50 சதவிகிதமும் உள்ளனர். சராசரியான   எழுத்தறிவு சதவிகிதம் (56) காணப்படுகிறது.  ஆண்கள் 67 ம், பெண்கள் 45ம் எழுத்தறிவு சதவிகிதமாக உள்ளது.  இக்கிராமத்தில் 6 வயதுடைய குழந்தைகள் 10 சதவிகிதத்திற்கு உள்ளனர்.  பெரும்பாலானவர்களின் தொழில்  வணிகம் செய்வதாகும்.

  • சதுரகிரி மகாலிங்கம் கோயில்  இக்கிராமத்தில் இருந்து  4 கி.மீ  தொலைவில் உள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லப்புரம்&oldid=3698447" இலிருந்து மீள்விக்கப்பட்டது