மல்லர் கம்பம்
மல்லர் கம்பம் என்பது உடல்வித்தை விளையாட்டு.
மல் என்னும் சொல் வளத்தைக் குறிக்கும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[1] உடல்வளம் கொண்ட சங்ககால மன்னர்களில் ஒருவன் ஆமூர் மல்லன். [2] தெருக்களில் வித்தை காட்டும் டொம்பர் தம் குழந்தைகளை நட்டுவைத்த மரத்தில் தலைகீழாக ஏறவும் இறங்கவும் செய்து விளையாட்டு காட்டுவர்.
தற்காலத்தில் இந்தியாவில் பல மாநிலங்களும் பங்கு கொள்ளும் தேசிய உடல்வித்தைப் போட்டியாக நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு தொன்றுதொட்டு விளையாடப்பட்டு வந்தாலும் 18-ம் நூற்றாண்டில் மகாராட்டிர மாநிலத்துப் பலம்பத்த தாதா தியோதர் என்பவரால் புத்துயிர் ஊட்டப்பட்ட விளையாட்டே சிறப்புற்று விளங்குகிறது. நடப்பட்ட கம்பத்தில் வித்தைகாட்டும் விளையாட்டில் ஆண்கள் பங்கு கொள்வர்.
கயிற்றில் தொங்கி வித்தை காட்டும் விளையாட்டுகளில் பெண்கள் பங்குகொள்கின்றனர்.
ஆதி மனிதன் மரம் ஏறி இறங்க பல்வேறு வழிமுறைகளை கையாண்டான். அதை விதியாக வகுத்தான். இந்தமுறையில் மனிதன் போல மரம் அல்லது கல்லில் உருவம் அமைத்து மல்யுத்தம் செய்ய பயிற்சிகள் மேற்கொண்டதால் இவ்விளையாட்டு மல்லர் கம்பம் எனப்பட்டது. தற்காலத்தில் கோவில் விழாக்களில் விளையாடும் ழவழுக்கு மரம் அக்கலத்தில் சோழர்கள் விளையாடிய மல்லர் கம்பததின் மறு உருவாகும்.காஞ்சியை ஆண்ட மாமல்லன் நரசிம்மப் பல்லவன் இக்கலையைஸ் செழிக்க செய்தான். தமிழ நாட்டு வீர தற்காப்பு கலைகளுல் இதுவும் ஒன்று. இவ்விலையாட்டு மனதை ஒருனிலைப் படுத்தும் ஓர் கலையாகும்.
இவ்விளையாட்டு வடமாநிலங்களில் மால்காம் என்ற பெயரில் விளையாடப்படுகிறது. தற்காலத்தில் மல்லர் விளையாட்டு நிலைக் கம்பம், தொங்குகம்பம் கயிறு விளையட்டு என பிரித்து விளையாடப்படுகிறது. நிலைக் கம்பம் என்பது பருமனான மரத்தை நட்டு அதில் ஏறி பலவித ஆசனங்கள் செய்வது. தொங்கு கம்பம் என்பது பருமனான மரத்தை கயிறுறில் கட்டி எண்ணெய் பூசி வீரதீர விளையாட்டு ஆடுவது. கயிறு விளையாட்டு என்பது கம்பத்திற்கு பதில் கயிற்றில் பெண்கள் ஏறி ஆசனம் செய்வது. இது இந்தியாவில் பல மநிலங்களில் இன்றும் விளையாடப் படுகிறது.