மல்லு ரவி

இந்திய அரசியல்வாதி

மல்லு ரவி (Mallu Ravi) ஓர் இந்திய அரசியல்வாயாவார். இவர், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தெலங்காணாப் பகுதியின் மூத்த துணைத் தலைவராக உள்ளார். 13வது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். தில்லியில் ஆந்திரப் பிரதேச அரசின் சிறப்புப் பிரதிநிதியாக இருந்தார். [1]

மல்லு ரவி
தெலங்காணா காங்கிரசு கட்சியின் மூத்தத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2021 ஜூன் முதல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஐதராபாத்து (இந்தியா)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்Hyderabad

மல்லு ரவி மாணவர் தலைவராக காங்கிரசு கட்சியில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1991-1996 மற்றும் 1998-1999 இல் நாகர்‌கர்னூல் மக்களவைத் தொகுதி உறுப்பினரக இருந்தார். ஆனால் 1999 இல் தனது தொகுதியை இழந்தார். 2008 இடைத்தேர்தலில் ஜெட்செர்ல்லா தொகுதியில் போட்டியிட்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். 2009 மற்றும் 2014 பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டார். ஆனால் இரண்டு முறையும் 20,000 வாக்குகளேப் பெற்று தோல்வியடைந்தார்.

சொந்த வாழ்க்கை

தொகு

மல்லு ரவி , காங்கிரசு கட்சியை சேர்ந்த கோனேரு ரங்கா ராவ் என்பவரின் மகளைத் திருமணம் செய்து கொண்டார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லு_ரவி&oldid=4151952" இலிருந்து மீள்விக்கப்பட்டது