மஹ்றம் என்பது முஸ்லிம்களில் ஒருவருக்கு அவரது பிறப்பின் காரணமாகத் திருமண உறவு வைத்துக்கொள்ளத் தடுக்கப்பட்டோரைக் குறிக்கும். பொதுவாக ஏற்கப்பட்டுள்ள கருத்தின்படி, பெண்கள் (ஹஜ்) பயணம் செய்யும்போது பயணத்தில் அவர்களுக்குத் துணையிருக்கத் தகுதியுள்ள ஒரு ஆடவர் உடன் செல்ல வேண்டும். பெண் புனிதப் பயணியைப் பொருத்தவரை, ஹஜ் நிறைவேற்றுவதற்கான ஒரு நிபந்தனையாகவும் இது கருதப்படுகிறது.[1][2]

பெண் புனிதப் பயணிக்கு அவரின் கணவர் உடன் செல்லலாம். ஆனால் அவர் மஹ்றமல்லர். ஒரு பெண்ணுக்கு மஹ்றமானோர் அவரது தந்தை, தந்தையின் தந்தை, தாயின் தந்தை, தந்தையின் அல்லது தாயின் உடன் பிறந்தான், தன் உடன் பிறந்தான், மகன், மகனின் அல்லது மகளின் மகன் முதலியோர் ஆவர்.

ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும் போதும் அவரது மஹ்றமான ஆண் ஒருவரே அப்பெண்ணின் பாதுகாவலராக இருக்க வேண்டும். அப்படி மஹ்றமான ஆண் இல்லாத வேளையில், சரீஅத் சட்ட நீதிபதி அல்லது மேற்படி நீதிபதியின் அனுமதியுடன் அவரது பிரதிநிதி அத்திருமணத்தை நடத்தி வைக்கலாம்.

சான்றுகள்

தொகு
  • The Quran, al-Baqara, 2:221
  • Abdul-Rahman, Muhammad Saed, Islam: Questions and Answers - Jurisprudence and Islamic Rulings, London: MSA Publication Limited, 2007, pp. 22–23.
  • Packard, Gwen K., Coping in an Interfaith Family, New York: Rosen Publishing Group, 1993, p. 11.

மேற்கோள்கள்

தொகு
  1. "Mahram - Oxford Islamic Studies Online". www.oxfordislamicstudies.com. Archived from the original on January 21, 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-01-16.
  2. வார்ப்புரு:Href
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஹ்றம்&oldid=4101776" இலிருந்து மீள்விக்கப்பட்டது