மாக்சுவெல்லின் தக்கை திருகு விதி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஒரு மின் கடத்தியில் மின்சாரம் பாயும்போது கடத்தியின் அருகாமையில் ஒரு காந்தப் புலம் தோற்றுவிக்கப்படுகிறது. இந்தக் காந்தப் புலத்தின் திசையினைக் காண மாக்சுவெல்லின் தக்கை திருகு விதி (Maxwell's cork screw law) பயன்படுகிறது.
- விதி
வலமாகச் சுழன்று முன்செல்லும் திருகியில், திருகு முனைச் செல்லும் திசையில் மின்சாரம் பாய்வதாகக் கொண்டால், ஒரு புள்ளியில் தோன்றும் காந்தப் புலத்தின் திசை திருகியின் சுழல் திசையால் குறிக்கப்படும்.