மாக்சு பெட்டினி
மாக்சு பெட்டினி (Max Pettini) (பிறப்பு: 15 ஜூன் 1949) கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்து வானியல் நிறுவனத்தின் நோக்கீட்டு வானியல் பேராசிரியர் ஆவார்.[1]
இவர் உரோம் நகரில் பிறந்தாலும், தன் இயற்பியல் இளம் அறிவியலையும் வானியற்பியல் முனைவர் பட்ட்த்தையும் இலண்டன் பலகலைக்கழக்க் கல்லூரியில் பயின்றார். இவர் நான்காண்டுகள் 1987 முதல் 1991 வரை நியூ சவுத் வேல்சு, எப்பிங் நகர ஆங்கிலேய ஆப்பிரிக்க வான்காணகத்தில் பணிபுரிந்ததைத் தவிர, வாழ்நாள் முழுவதும் ஐக்கிய இராச்சியத்திலேயே பணி மேற்கொண்டுள்ளார். இவர் பிரித்தானியக் குடியுரிமையைப் பெற்றுள்ளார்.[1]
இவரது தொடக்கநிலை ஆய்வு பால்வழியைச் சூழ்ந்தவண்ணம் சூடான மின்னணுவாக்க வளிமப் புறணிவட்டம் அமைவதை நிறுவும் நோக்கீட்டுச் சான்ற்களைத் தந்தது.[2]
பெட்டினி 2008 இல் அரசு வானியல் கழக எர்ழ்செல் பதக்கத்தைப் பெற்றார். மேலும் 2010 மே மாத்த்தில், இவர் அரசு கழக ஆய்வுறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Pettini, Max at ISIHighlyCited.com
- ↑ 2.0 2.1 "Royal Society announces new Fellows". Royal Society. 24 May 2010. பார்க்கப்பட்ட நாள் 2011-01-20.