மாங்காடு வெள்ளீசுவரர் கோயில்
மாங்காடு வெள்ளீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
தொகுஇக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாங்காடு என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]
இறைவன், இறைவி
தொகுஇக்கோயிலின் மூலவராக வெள்ளீசுவரர் உள்ளார். அவரை பார்க்கவேசுவரர் என்றும் அழைப்பர். இக்கோயிலின் தல மரம் மாமரம் ஆகும். கோயிலின் தீர்த்தம் சுக்ர தீர்த்தம் ஆகும்.சிவராத்திரி, கார்த்திகை, ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.[1]
அமைப்பு
தொகுமூலவர் சதுர பீடத்தில் காணப்படுகிறார். விமானத்தில் எண்திசை அதிபர்கள் உள்ளனர். திருச்சுற்றில் வீரபத்திரர் உள்ளார். அவரது வலது பாதத்திற்கு அருகே தட்சன் ஆட்டுத்தலையுடன் வணங்கும் கோலத்தில் உள்ளார். இங்குள்ள முருகன் சன்னதியில் இறைவனும் இறைவியும் ஒரே கல்லில் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியின் காலடியின் முயலகன் இடது புறம் திரும்பிய நிலையில் உள்ளார். லிங்கோத்பவர் அருகில் பிரம்மாவும், விஷ்ணுவும் அவரை வணங்கிய நிலையில் உள்ளனர். இந்த விஷ்ணு பிரயோக சக்கரத்துடன் உள்ளார். அவ்வாறே கோஷ்டத்தில் உள்ள துர்க்கையும் பிரயோக சக்கரத்துடன் உள்ளார்.தல விநாயகர் நெற்கதிர் விநாயகர் என்றழைக்கப்படுகிறார். அவர் மேல் கையில் நெற்கதிரையும் கீழ் கையில் மாங்கனியையும் வைத்துள்ளார். [1]
வரலாறு
தொகுகைலாயத்தில் ஒரு முறை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்களை மூடவே உலகம் இருண்டது. சிவன் மானிடப்பிறவி எடுக்கும்படி பார்வதிக்கு சாபமிட்டார். பார்வதி இத்தலத்தில் இருந்து வழிபட்டபின் அவரை திருமணம் செய்துகொள்வதாகக் கூறினார். அதன்படி பார்வதி இங்கு வந்து தவம் செய்தார். அப்போது அங்கு, தன் பார்வையை இழந்திருந்த சாபத்திலிருந்து விமோசனம் பெற இகு தவம் செய்துகொண்டிருந்தார். அம்பிகைக்குக் காட்சி தர வந்த சிவன் சுக்கிராச்சாரியாருக்கு காட்சி தந்தார். அவர் அப்போது தவத்தில் இருந்ததால் சிவனால் செல்லமுடியாமல் இறைவியிடம் காஞ்சிபுரத்திற்கு வந்து தவம் செய்யும்படியும் அங்கு காட்சி தருவதாகவும் கூற, இறைவியும் அவ்வாறே செய்தார். சுக்ராச்சாரியாருக்கு காட்சி தந்த சிவன் இங்கு எழுந்தருளினார்.[1]