மாச்சீர் - தமிழ் இலக்கணம் யாப்பு
தமிழ் யாப்பிலணக்கத்தில் நேரசையில் முடியும் ஈரசைச் சீர் மாச்சீர் ஆகும்.
விளக்கம்
தொகுநேர் நேர் = தேமா
நிரை நேர் = புளிமா போல மா ஈற்றசை வாய்ப்பாடு கொண்டு முடியும் ஈரசைச் சீர்கள் மாச்சீர் எனப்படும்
பெயர்க்காரணம்
தொகுவாய்பாட்டில் இறுதியாக மா என்னும் ஓசையைக் கொண்டு முடிவதால் இதனை மாச்சீர் என்பர். இதில் ஈற்றசை எப்போதும் நேர் அசையைக் கொண்டு முடியும்,
எ.கா.
கற்/ க = நேர் நேர் அசையைக் கொண்டுத் தேமா என முடியும்.
பத/ வி = நிரை நேர் அசையைக் கொண்டு புளிமா என முடியும்.
சிறப்புப் பெயர்
தொகுமாச்சீரும் விளச்சீரும் ஆசிரியப்பாவில் மிகுதியாக பயின்று வரும் ஆதலால் இதனை ஆசிரியவுரிச்சீர் என்றும் அழைப்பர்.
மேற்கோள்
தொகு1.தமிழ் இலக்கணக் களஞ்சியம் - தேவிரா
2.நற்றமிழ் இலக்கணம் - அ.ஞானசம்பந்தம்
3.தொல்காப்பியம் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.