மாஞ்சாரல் (Mango showers அல்லது mango rains) என்பது பொதுவாக பருவப் பெயர்ச்சிக் காற்றுக்கு முன்பாக இடம்பெறும் மழைவீழ்ச்சியைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும். சில வேளைகளில் இம்மழைக்காலத்தை சித்திரை மழை அல்லது கோடைச் சாரல் எனவும் அழைக்கப்படுகிறது. இது தெற்காசிய, தென்கிழக்காசியப் பகுதிகளில் குறிப்பாக இந்தியா,[1], மற்றும் கம்போடியா[2] ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. தெற்காசியாவில், இம்மழைவீழ்ச்சி காரணமாக இப்பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைந்து முதிர்ச்சி அடைகின்றன.[3]

இம்மழைவீழ்ச்சி பொதுவாக மார்ச் மாதம் முதல் ஏப்ரல் வரை காணப்படுகிறது. இந்தியாவில், வங்காள விரிகுடாவில் தோன்றும் இடியுடன் கூடிய மழையினால் மாஞ்சாரல்கள் இடம்பெறுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. "Karnataka / Bangalore News : Mango growers a worried lot". The Hindu. 2007-04-06. Archived from the original on 2013-01-25. பார்க்கப்பட்ட நாள் 2013-06-29.
  2. Sunderland, T., Sayer, J., Hoang, M. and Laurance, W. (2012) Evidence-based Conservation: Lessons from the Lower Mekong. Earthscan
  3. Gunnell, Yanni (18 March 1997). "Relief and Climate in South Asia: The Influence of the Western Ghats on the Current Climate Pattern of Peninsular India". International Journal of Climatology 17: 1169-1182. https://www.researchgate.net/profile/Yanni_Gunnell/publication/230131802_Relief_and_climate_in_South_Asia_the_influence_of_the_Western_Ghats_on_the_current_climate_pattern_of_Peninsular_India/links/0deec5371bad2e851c000000.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாஞ்சாரல்&oldid=3567081" இலிருந்து மீள்விக்கப்பட்டது