மாடம்பாக்கம் லலிதா பரமேஸ்வரி கோயில்

லலிதா பரமேஸ்வரி கோயில் என்பது சென்னை மாவட்டம் மாடம்பாக்கத்தில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். [1] இந்தக் கோயிலில் பதினென் சித்தர்கள் சன்னதிகள் அமைந்துள்ளது.

சன்னதிகள் தொகு

இத்தலத்தின் மூலவர் பச்சக்கல்லில் அமைந்த மகாமேரு அம்பிகையாவார். சேஷாத்திரி சாமிகள், குருவாயூரப்பன், சக்தி பீட கணபதி, வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், ஆஞ்சநேயர், கோதண்டராமர், நாகராஜர், முனீஸ்வரர், பச்சைக்கல் ராஜ காளியம்மன், தட்சிணாமூர்த்தி, காமதேனு, நால்வர், நந்திகேசுவரர், மகாவிஷ்ணு, பிருந்தா சன்னதிகள் ஆகியன உள்ளன. [1]

நவகிரகங்களுக்கு சன்னதி இல்லை. பாம்பாட்டி சித்தர், கஞ்சமலை சித்தர், கருவூரார், வள்ளலார், குதம்பை சித்தர், கபிலர் சித்தர், சென்னிமலை சித்தர், கடுவெளி சித்தர், பட்டினத்தடிகள், இடைக்காடர், அழுகணி சித்தர், அகப்பேய் சித்தர், கைலாய கம்பளிச் சட்டமுனி சித்தர், சிவவாக்கியர், சட்டைமுனி, புலிப்பாணி, காக புஜண்டர், போகர் ஆகிய சித்தர்களின் சன்னதிகள் உள்ளன.[1]

தலசிறப்பு தொகு

மகாமேரு அம்பிகை மூலவராக உள்ளார். இவரை பெண்கள் சென்று அபிசேகம் செய்யவும், பூசை செய்யவும் அனுமதியுண்டு. பதினென் சித்தர்களும் வாகனங்களுடன் உள்ளனர்.

ஆதாரங்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Temple : Temple Details - - - Tamilnadu Temple - லலிதா பரமேஸ்வரி".