மாடலூர் கிழார்

மாடலூர் கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 150.

பாடல் சொல்லும் செய்தி

தொகு

இரவில் வந்தால் தலைவியைப் பெறலாம் என்று தலைவனிடம் சொல்லிவிடுகிறாள் தோழி. இந்தத் தோழிக்குத் தலைவி சொல்கிறாள்.

(தேன் எடுக்கும்போதும் இரவில் தினைப்புனம் காக்கும்போதும்) சேணோன் ஞெகிழியை (தீப்பந்தத்தை) ஆங்காங்கே மாட்டியிருப்பான். அவை இரவில் விண்மீன்கள் இமைப்பது போல் தோன்றும். அத்தகைய மலைநாடன் அவன்.

அவன் தன் அகன்ற மாப்பில் சந்தனம் பூசியிருப்பான். அந்த மார்பு வியப்புக்குரியது. அதனை நான் நினைத்தால் உள்ளத்துக்கு நோய் வந்துவிடுகிறது. அந்த மார்பை அணைத்தால் நோய் நீங்கிவிடுகிறது. இது எதனால்?

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாடலூர்_கிழார்&oldid=2718202" இலிருந்து மீள்விக்கப்பட்டது